Ad Code

சிரேனியு Publius Sulpicius Quirinius Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 11
சிரேனியு: யாரேனும் பயன்படுத்தும் கடவுள்

1. பெயர்: சிரேனியு Publius Sulpicius Quirinius
2. அர்த்தம்: ஈட்டி ஏந்தியவன் / போர்வீரன்

3. சிறுகுறிப்பு: 
• ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் சீரியா நாட்டின் தேசாதிபதியாக (ஆளுநராக / Governor of Syria) பதவி வகித்தவர்.
• சிரேனியு ஒரு பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அகஸ்து ராயன் கட்டளை பிறப்பிக்கிறார், சிரேனியு அதைச் செயல்படுத்துகிறார். நாசரேத்தில் இருக்கும் ஒரு தச்சனுக்கும் அவனுடைய மனைவிக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை ரோமப் பேரரசின் ஆளுநர் தீர்மானிப்பது போல வெளியே தெரிகிறது. காரணம் திருமணம் முறையாக முடிக்கும் முன்பு கன்னிமரியா யோசேப்பின் மனைவியாக பெத்லகேம் வருவது அவ்வளவு எளிதல்ல. அந்தப் பிரசவ காலத்தில் சுமார் 130 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் பயணம். உலகத் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குப் பின்னால், தம்முடைய பிள்ளைகளின் காரியங்களை வாய்க்கப்பண்ணும் கடவுளின் மறைமுகமான கரம் கிரியை செய்கிறது.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
லூக்கா 2.1

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments