திருமறையில் யார் இவர் யாரோ? - 10
அகஸ்து ராயன்: இறைத் திட்டத்தில் உலக மனிதர்கள்
1. பெயர்: அகஸ்து ராயன் (பேரரசர் அகஸ்டஸ் / Caesar Augustus)
2. அர்த்தம்: கண்ணியத்திற்குரியவன் அல்லது வணக்கத்திற்குரியவன்
3. சிறுகுறிப்பு:
• இவர் ஜீலியஸ் சீசரின் வளர்ப்பு மகனும், ரோம சாம்ராஜ்யத்தின் முதலாவது பேரரசரும் ஆவார்.
• இவரது உண்மையான பெயர் 'ஆக்டேவியன்' (Octavian). ஆனால் செனட் சபை இவருக்கு 'அகஸ்டு' (Augustus) என்ற பட்டத்தை வழங்கியது.
• இவர் சுமார் கி.மு. 27 முதல் கி.பி. 14 வரை ரோமை ஆண்டார். இயேசுவின் பிறப்பு இவருடைய ஆட்சியில்தான் நிகழ்ந்தது.
• 'ராயன்' அல்லது 'சீசர்' என்பது ரோமப் பேரரசர்களைக் குறிக்கும் பொதுவான பட்டப்பெயர் ஆகும்.
• இவர் ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட காலத்தில், உலகில் நிலவிய அமைதியான ஒரு காலகட்டம் 'பாக்ஸ் ரோமனா' (Pax Romana - ரோம அமைதி) எனப்படுகிறது.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இவருடைய மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டளையால்தான், மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்குச் சென்ற போது இயேசு பிறந்தார். கடவுள் எதையும் தோராயமாகச் செய்வதில்லை. உலக வரலாற்றில் யார், எப்போது அதிகாரத்தில் இருக்க வேண்டும், தீர்க்கதரிசனங்கள் எப்போது நிறைவேற வேண்டும் என்பதை அவர் மில்லிசெகண்ட் மாறாமல் துல்லியமாகத் திட்டமிடுகிறார். தம் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற (மீகா 5:2) கடவுள் யூதரல்லாத அதிகாரியையும் பயன்படுத்துகிறார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
லூக்கா 2:1
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments