காய்பா: ஆபத்தான வெளிவேச பக்தி
1. பெயர்: காய்பா (ஆசாரியர்) • Caiaphas
2. அர்த்தம்:
தேடுபவர்" (Searcher) அல்லது "தாழ்ந்தவன்" (Dalliance / Depression).
அராமிய மொழியில் இதற்கு "பாறை" அல்லது "வலுவான அடித்தளம்" என்றும் ஒரு கருத்து உண்டு.
3. சிறுகுறிப்பு:
• இவர் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் எருசலேமில் இருந்த யூதர்களின் தலைமை ஆசாரியர் ஆவார்.
• புகழ்பெற்ற அன்னா என்பவருடைய மருமகன்.
• "ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும்" என்று அறியாமலேயே தீர்க்கதரிசனமாக இயேசுவின் மரணத்தைக் குறித்துக் கூறியவர்.
• இயேசுவை அநியாயமாய் விசாரித்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கக் காரணமாய் இருந்த யூத மத நீதிமன்றமான 'சங்கத்திற்கு' (Sanhedrin) இவரே தலைமை தாங்கினார்.
• கி.பி. 18 முதல் 36 வரை (சுமார் 18 ஆண்டுகள்) தன் அதிகாரத்தால் ஆட்டிப்படைத்த இவர் பதவியையும் உரோமர்களின் ஆதரவையும் இழந்து சாதாரண மனிதனாக மாறினார்.
• எருசலேமில் 1990 இல் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆதாரமான பண்டைய எலும்புப் பெட்டியில் (Ossuary), "யெஹோசெப் பார் காய்பா" (காய்பாவின் மகனாகிய யோசேப்பு) என்று எழுதப்பட்டிருந்தது.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
காய்பா தலைமை ஆசாரியருக்கான ஆடைகளை அணிந்து, நியாயப்பிரமாணத்தை நன்கு அறிந்தவராக வெளியில் காட்சியளித்தார். ஆனால், அவருடைய இருதயமோ அநீதியினாலும் கபத்தினாலும் நிறைந்திருந்தது. ஒரு தலைமை ஆசாரியராக நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய காய்பா, இயேசுவுக்கு எதிராகப் பொய் சாட்சிகளைத் தேடினார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 26: 57 - 68 (இயேசு காய்பாவின் அரண்மனையில் விசாரிக்கப்படுதல்)
யோவான் 11: 49 - 53 (காய்பாவின் தீர்க்கதரிசன வார்த்தை)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments