Ad Code

பிரொகோர் • Prochorus Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 61
பிரொகோர்: உண்மையால் உயர்வு

1. பெயர்: பிரொகோர் • Prochorus

2. அர்த்தம்: 
நடனக் குழுவின் தலைவன்

3. சிறுகுறிப்பு: 
• பாரம்பரிய வரலாற்றுப்படி, பிரொகோர் இயேசு கிறிஸ்துவால் சுவிசேஷ ஊழியம் செய்ய அனுப்பப்பட்ட 70 சீடர்களில் (லூக்கா 10) ஒருவராகவும் கருதப்படுகிறார்.ஆதி திருச்சபையில் எருசலேமில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு உதவிக்காரர்களில் (Deacons) ஒருவர். 
• இவர் பரிசுத்த ஆவியும் ஞானமும் நற்சாட்சியும் நிறைந்த ஒரு தேவ மனிதராக இருந்தார். 
• அப்போஸ்தலர்கள் ஜெபம் பண்ணி இவர்கள் மேல் கைகளை வைத்து இவர்களை ஊழியத்திற்குப் பிரதிஷ்டை செய்தார்கள்.
• இவர் அப்போஸ்தலனாகிய யோவானின் சீடராகவும், அவருக்குச் செயலராகவும் (Scribe) இருந்து ஊழியம் செய்தார் என்று பாரம்பரியக் குறிப்புகள் கூறுகின்றன. 
• 'நிக்கோமேதியா' (Nicomedia - இன்றைய துருக்கியில் உள்ள பகுதி) பட்டணத்தின் முதல் ஆயராகப் (Bishop) பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
• இறுதியாக அந்தியோகியா நகரில் கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து தியாகியானார் (Martyr).

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
முதலில் விதவைகளுக்குத் தினமும் நடக்கும் உணவுப் பங்கீட்டில் முறைகேடுகள் எழாமல் கவனித்துக் கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பந்தி விசாரணையாகிய எளிய ஊழியத்தில் பிரொகோர் உண்மையாய் இருந்தார். கடவுள் அவரை அபோஸ்தலன் யோவானுக்கு இணையான சீடராகவும், நிக்கோமேதியா திருச்சபையின் ஆயராகவும் உயர்த்தி, சுவிசேஷ வரலாற்றில் அவருக்கு மேன்மையான இடத்தைத் தந்தார். சிறிய காரியங்களில் காட்டப்படும் உண்மையே, பெரிய பொறுப்புகளுக்கு கடவுளால் கொடுக்கப்படும் தகுதியாகும்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
அப்போஸ்தலர் 6: 1-6

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments