Ad Code

சவுல் என்ற பவுல் • Saul @ Paul • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 66
பவுல்: இறுதிவரை இறைப்பணியில்

1. பெயர்: சவுல் என்ற பவுல் • Saul @ Paul 

2. அர்த்தம்: 
சவுல் - கேட்கப்பட்டவன்
பவுல் - சிறியவன்

3. சிறுகுறிப்பு: 
• கிறிஸ்தவர்களைக் கடுமையாகத் துன்புறுத்திய இவர் தமஸ்கு பாதையில் உயிர்த்தெழுந்த இயேசுவைச் சந்தித்து மாபெரும் இறை ஊழியராக மாற்றமடைந்தார்.
• புதிய ஏற்பாட்டில் புறஜாதி மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் முதன்மை அப்போஸ்தலராகப் பணியாற்றினார்.
• திருச்சபைகளைத் திடப்படுத்தவும் ஆவிக்குரிய நெறிமுறைகளைக் கற்பிக்கவும் புதிய ஏற்பாட்டில் 13 நிருபங்களை எழுதினார்.
• கி.பி. 64–67 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், ரோம பேரரசன் நீரோவின் (Nero) ஆட்சிக்காலத்தில் ரோமில் தியாகியாக மரணமடைந்தார்.
• இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிற்காலத்தில் "சுவர்களுக்கு வெளியே உள்ள புனித பவுல் பேராலயம்" (Basilica of Saint Paul Outside the Walls) கட்டப்பட்டது. 

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சிறைவாசம், சித்திரவதைகள் மற்றும் பல ஆபத்துகளுக்கு மத்தியிலும் தளராமல், ரோம பேரரசு முழுவதும் மூன்று மிஷனரி பயணங்கள் மூலம் சுவிசேஷத்தைப் பரப்பி தன் வாழ்வின் இறுதிவரை உண்மையுள்ள சாட்சியாய் வாழ்ந்தார்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
அப்போஸ்தலர் 7 - 28
13 நிருபங்கள்
2 தீமோத்தேயு 4:1–8

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments