1. பெயர்க் காரணம் & நோக்கம்
இஸ்ரவேலர்கள் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தை நோக்கிப் பாலைவனத்தில் 40 ஆண்டுகள் பயணம் செய்தபோது கூடாரங்களில் (கூரை/தற்காலிகக் குடில்கள்) தங்கியிருந்ததை நினைவுகூரும் பொருட்டு இது கொண்டாடப்படுகிறது.
2. பண்டிகையின் காலம் (Duration & Date)
எபிரேய காலண்டரின்படி திஸ்ரி (Tishrei) மாதம் 15-ஆம் நாள் முதல் 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
7 நாட்கள் முடிந்தவுடன், 8-ஆம் நாள் சிறப்புச் சபைக்கூட்டம் (Shemini Atzeret) நடைபெறும். இந்நாளில் ஆண்டவரின் பிரசன்னத்தை மட்டும் ஆவலோடு எதிர்பார்க்கும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்படும்.
3.கொண்டாடும் முறை: கூடாரம் அமைத்தல் (Sukkot): பண்டிகையின் 7 நாட்களும் மக்கள் தங்கள் வீடுகளின் முற்றம், மொட்டை மாடி அல்லது தோட்டத்தில் மரக்கிளைகள், பனை ஓலைகள் ஆகியவற்றைக் கொண்டு தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, அதற்குள் உணவருந்தி இரவில் தங்குவார்கள்.
நான்கு தாவரங்கள் (Four Species):
லூலாவ் (பேரிச்சம்பழ ஓலை), எத்ரோக் (எலுமிச்சை போன்ற பழம்), மைர்ட்டில் கிளைகள் (சுடரி) மற்றும் அலரி (வில்லோ) கிளைகள் ஆகிய நான்கையும் ஒன்றாகக் பிடித்து இறைவனை நோக்கி நான்கு திசைகளிலும் அசைத்து ஆசி பெறுவார்கள்.
4. சிறப்புகள்:
அறுவடைப் பண்டிகை: இது எபிரேய மாதமான 'திஸ்ரி' (செப்டம்பர் – அக்டோபர்) மாதத்தில் தானியங்களும் பழங்களும் அறுவடை செய்யப்பட்ட பின் கொண்டாடப்படுவதால், இறைவனுக்கு நன்றி செலுத்தும் அறுவடைப் பண்டிகையாகவும் கருதப்படுகிறது.
மகிழ்ச்சியின் பண்டிகை
விவிலியக் கட்டளைப்படி இது மிகுந்த மகிழ்ச்சியோடும், ஏழைகள் மற்றும் அந்நியர்களுக்கு உணவளித்தும் கொண்டாடப்படுகிறது.
5. மரபுகள்
தண்ணீர் ஊற்றும் சடங்கு (Water Libation Ceremony): பண்டிகை நாட்களில் ஆசாரியர்கள் சீலோவாம் குளத்திலிருந்து பொற்கடசத்தில் தண்ணீர் முகந்து கொண்டுவந்து, பலிபீடத்தின் மீது ஊற்றுவார்கள்.
இது வரவிருக்கும் மழைக் காலத்திற்காக இறைவனிடம் வேண்டிச் செய்யப்படும் சடங்காகும்.
பெரிய விளக்குகள் & வெளிச்சம்: தேவாலயத்தின்
முற்றத்தில் மிகப்பெரிய நான்கு பொன் குத்துவிளக்குகள் ஏற்றப்படும். இதன் வெளிச்சம் எருசலேம் நகரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்யும்.
இது பாலைவனப் பயணத்தில் இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டிய மேகஸ்தம்பத்தையும் அக்கினிஸ்தம்பத்தையும் நினைவூட்டுகிறது

0 Comments