Ad Code

அம்பிலியா Ampliatus Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 115
அம்பிலியா : பிரியமானவர்

1. பெயர்:  
அம்பிலியா Ampliatus 

2. அர்த்தம்: 
பெரிதாக்கப்பட்டவர் Enlarged

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
ரோமர் 16:8
வெறும் "சகோதரன்" என்று கூறாமல் "எனக்குப் பிரியமானவர்" (My beloved) என்று அன்போடு அழைக்கிறார். பவுலுக்கும் இவருக்கும் இடையே இருந்த ஆழமான ஆவிக்குரிய அன்பையும் நட்பையும் இது காட்டுகிறது.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• ரோம சபை உறுப்பினர்: இவர் ரோமில் இருந்த ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் மிக முக்கியப் பங்கு வகித்த உறுப்பினராக இருந்தார்.
• அடிமைப் பின்னணி: "அம்பிலியா" என்பது அக்கால ரோம பேரரசில் அடிமைகளுக்கு அல்லது விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்கு அதிகமாகச் சூட்டப்பட்ட பொதுவான பெயராக இருந்தது.
• திருச்சபை பாரம்பரியம் (Church Tradition): இவர் அப்போஸ்தலனாகிய அந்திரேயாவின் சீடர்களில் ஒருவராகவும், பின்னாளில் பல்கேரியாவின் 'ஒடிசோபோலிஸ்' (Odyssopolis - தற்போதைய Varna) பகுதியின் பிஷப்பாகச் (கண்காணியாக) பணியாற்றி, கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாக மரித்தார் என்றும் நம்பப்படுகிறது.
• ரோமக் கல்லறை கல்வெட்டு: ரோமில் உள்ள சாந்தா தொமிலா (Catacomb of Domitilla) என்ற நிலத்தடி கல்லறையில் "AMPLIATI" என்ற பெயர் பொறிக்கப்பட்ட முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறப்புமிக்க கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட அம்பிலியா கல்லறையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சமூகத்தில் இவர் ஒரு சாதாரண அடிமையாகவோ அல்லது எளிய மனிதராகவோ இருந்திருக்கலாம். ஆனால், அப்போஸ்தலன் பவுல் இவரை "கர்த்தருக்குள் எனக்குப் பிரியமானவர்" என்று அழைக்கிறார். கர்த்தருக்குள் எனக்குப் பிரியமானவர்" என்று பவுல் எழுதுவதற்குக் காரணம், இவர்களுடைய அன்பு உலகப் பிரகாரமான சுயநல உறவு அல்ல; அது கிறிஸ்து இயேசுவின் மூலமாக இணைக்கப்பட்ட தெய்வீகமான, தூய்மையான உறவு. 

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments