Ad Code

யூலியு Julius, the Centurion Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 111
யூலியு: இறைத் திட்டத்திற்குப் புறஜாதியாரும் கருவி

1. பெயர்:  
யூலியு Julius, the Centurion

2. அர்த்தம்: 
மென்மையான கூந்தல் உடையவர் (Downy-haired) அல்லது இளமையானவர்" (Youthful)

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 27:1 – பவுலையும் மற்றக் கைதிகளையும் "அகஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு" எனும் நூற்றுக்கு அதிபதியிடம் ஒப்படைத்தனர்.
 அப்போஸ்தலர் 27:3 – சீதோனில், யூலியு பவுலுக்குத் தயவுசெய்து, நண்பர்களிடம் சென்று உதவிபெற அனுமதியளித்தார்.
அப்போஸ்தலர் 27:42-43 – கப்பல் உடைந்தபோது கைதிகளைக் கொல்ல போர்வீரர்கள் முயன்றனர்; ஆனால், யூலியு பவுலைக் காப்பாற்ற அதைத் தடுத்தார்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• அகஸ்து பட்டாளம் (Augustan Cohort): இவர் உரோமை பேரரசரின் சிறப்புப் படைப்பிரிவான அகஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருந்தார். இவர்கள் பேரரசரின் நேரடி மேல்பார்வையில் கைதிகளைக் கொண்டு செல்லும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
• அதிகாரமும் கண்ணியமும்: உரோமை சட்டத்தின்படி கைதிகள் தப்பியோடினால் போர்வீரர்களுக்கே மரண தண்டனை விதிக்கப்படும். ஆனால், யூலியு பவுலின் நற்குணத்தையும் இறைவனின் பிரசன்னத்தையும் உணர்ந்து, மரண பயத்தையும் தாண்டி பவுலுக்குத் தயவு காட்டினார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இரட்சிக்கப்படாத ஒரு உரோமை அதிகாரி மூலமாகவும் தேவன் தன் ஊழியக்காரனான பவுலின் உயிரைப் பாதுகாத்து, ரோமாபுரிக்குச் செல்லும் தனது திட்டத்தை நிறைவேற்றினார்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments