புபிலியு: அந்நியரை உபசரிப்போம்
1. பெயர்:
புபிலியு Publius
2. அர்த்தம்:
பிரபலமானவர்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 28:7 — மேல்தா தீவின் முதன்மை தலைவனான புபிலியு, கப்பல் சேதமடைந்து கரை ஒதுங்கிய பவுலையும் மற்றவர்களையும் ஏற்றுக்கொண்டு 3 நாட்கள் அன்புடன் உபசரித்தான்.
அப்போஸ்தலர் 28:8 — காய்ச்சலாலும் இரத்தபேதியாலும் பாதிக்கப்பட்டிருந்த புபிலியுவின் தகப்பனை, பவுல் ஜெபம் பண்ணி கைகளை வைத்து குணமாக்கினார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• புபிலியு, ரோம அரசாங்கத்தின் கீழ் மெலித்தா (Malta) தீவைக் கண்காணித்து வந்த முதன்மை அதிகாரியாவார் (Chief official of the island).
• பாரம்பரிய வரலாற்றுச் செய்திகளின்படி, பவுலின் மூலமாக அற்புதங்களைக் கண்ட புபிலியு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.
• பின்னர் இவர் மெலித்தா தீவின் முதல் ஆயராக (Bishop of Malta) நியமிக்கப்பட்டு, கிறிஸ்தவ விசுவாசத்திற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்து தியாகியாக (Martyr) மரித்தார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
முன் பின் தெரியாத அந்நியர்களான பவுலையும் அவருடைய தோழர்களையும் புபிலியு மனதார உபசரித்தான். அவனுடைய அந்த தாராள குணத்திற்கு, கடவுள் அவனுடைய சொந்த தகப்பனின் நோயைக் குணமாக்கி, அந்தத் தீவு முழுவதற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்து பிரதிபலன் அளித்தார். நாம் பிறருக்குக் காட்டும் தயவும் உபசரிப்பும் ஒருபோதும் வீண்போகாது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments