தென்னிந்திய திருச்சபை (CSI) பிறந்த பொன்னாள் - செப்டம்பர் 27, 1947
1908-இல்: Presbyterian மற்றும் Congregational திருச்சபைகள் ஒன்றிணைந்து South India United Church (SIUC) உருவானது. இவ்வாறு இணைந்ததே, பின்னர் CSI உருவாக வழிவகுத்தது.
1919-இல்: Anglican மற்றும் South India United Church திருச்சபைகளைச் சேர்ந்த இந்தியத் தலைவர்கள் தரங்கம்பாடியில் ஒன்று கூடி, ஒரு United Church உருவாக்குவது குறித்து ஆலோசித்தனர். இதன் முன்னணியில் Rt.Rev.V.S.Azariah முக்கியப் பங்கு வகித்தார்.
1919 - 1947: இக்காலத்தில் மொத்தம் 28 ஆண்டுகள் இறையியல் சிந்தனை, ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள், ஜெபம், தியாகம் ஆகியவைச் செயல்படுத்தப்பட்டன.
1947 செப்டம்பர் 27: சென்னை புனித ஜார்ஜ் பேராலயத்தில் (St.George's Cathedral) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றிய ஆலயத்தில் பல்வேறு திருச்சபைகள் ஒன்றிணைந்து Church of South India உருவாக்கப்பட்டது. இதற்கு Bishop of Travancore and Cochin - Rt.Rev.C.K.Jacob தலைமை தாங்கினார்.
முக்கியமான சிறப்பம்சங்கள்
CSI ஆரம்பத்தில் 14 திருமண்டலங்களுடன் தொடங்கியது. அதில் Jaffna Diocese இலங்கையைச் சேர்ந்தது.
CSI என்பது ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமல்ல; விசுவாசம், ஆராதனை, ஊழியம், சாட்சியில் கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்த இயக்கமாகும்.
வெவ்வேறு திருச்சபை மரபுகளின் நல்ல அம்சங்களைப் பாதுகாத்தபடியே, அனைவரும் ஒன்றுபட்டனர்.
CSI சபைகளின் சின்னம்
வெள்ளை நிறப் பின்னணியில் ஒரு சிலுவை, தாமரை மலரின் மீது அமைக்கப்பட்டுள்ளது. தாமரையின் இதழ்கள் பரிசுத்த ஆவியின் அக்கினி நாவுகளைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன (அப் 2:3). இதனைச் சுற்றிலும், திருச்சபையின் பெயரும் அதன் குறிக்கோள் வாசகமும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சின்னத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த J.Vasanthan வடிவமைத்தார்.
சிலுவை மையப்பகுதியில் அமைந்திருப்பது: கிறிஸ்துவின் சிலுவையே திருச்சபையின் அடித்தளமும் விசுவாசத்தின் மையமும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சிலுவையின் நான்கு கரங்களும் ஒரே நீளத்தில் இருப்பது: அனைவரும் கடவுளுடைய பார்வையில் சமமானவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
தாமரை இடம்பெற்றிருப்பது: இந்த திருச்சபை இந்திய மண்ணின் அடையாளத்தையும், அதே நேரத்தில் கடவுளுடைய கிருபையைச் சார்ந்திருப்பதையும் வெளிப்படுத்துகிறது. எவ்வாறு தாமரை சூரிய உதயத்தில் மலர்ந்து, சூரிய அஸ்தமனத்தில் மூடிக்கொண்டு, சூரியனைச் சார்ந்து வாழ்கிறதோ, அதுபோல திருச்சபையும் கடவுளுடைய கிருபையைச் சார்ந்தே வாழ்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள CSI-யின் குறிக்கோள் வாசகம், யோவான் 17:21-இல் இயேசு கிறிஸ்து ஜெபித்த வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டது: "அவர்கள் அனைவரும் ஒன்றாயிருக்கும்படி."
CSI திருச்சபையின் பண்டிகைகள்
⚡தவக்காலம் (Lent Days)
பாடுகளின் வாரம் (Passion Week)
⚡குருத்தோலை ஞாயிறு (Palm Sunday)
⚡பெரிய வியாழன் (Maundy Thursday)
⚡பெரிய வெள்ளி (Good Friday)
⚡ உயிர்த்தெழுதல் திருநாள் (Easter)
⚡விண்ணேற்றத் திருநாள் (Ascension Day)
⚡பெந்தெகொஸ்தே திருநாள் (Pentecost)
⚡அறுவடை நன்றி திருநாள் (Lammas)
⚡கிறிஸ்துமஸ் (Christmas)
இறையியல் கல்வி நிலையங்கள்
⚡Kerala United Theological Seminary (KUTS), Trivandrum, Kerala
⚡Mennonite Brethren Centenary Bible College (MBCBC), Shamshabad, Telangana
⚡Bethel Bible College (BBC), Guntur, Andhra Pradesh
⚡ Gurukul Lutheran Theological College & Research Institute (GLTCRI), Chennai, Tamil Nadu
⚡Andhra Christian Theological College (ACTC), Hyderabad, Telangana
⚡Tamil Nadu Theological Seminary (TTS), Madurai, Tamil Nadu
⚡Union Biblical Seminary (UBS), Pune, Maharashtra
⚡ United Theological College, Bangalore (UTC), Karnataka
⚡ South Asia Theological Research Institute (SATHRI), Bangalore, Karnataka
⚡Karnataka Theological College (KTC), Mangalore, Karnataka
⚡Bishop's College (BC), Kolkata, West Bengal
⚡Serampore College (SC), Serampore, West Bengal
CSI-யின் ஆரம்பகால பேராயர்கள்
1. Rt.Rev.C.K.Jacob - Travancore and Cochin
2. Rt.Rev.A.M.Hollis - Madras
3. Rt.Rev.G.T.Selwyn - Tirunelveli
4. Rt.Rev.A.B.Elliot - Dornakal
5. Rt.Rev.Y.Muthyalu - Krishna Godavari
6. Rt.Rev.S.Kulandran - Jaffna
7. Rt.Rev.J.E.Lesslie Newbegin - Madurai & Ramnad
8. Rt.Rev.Bunyan Joseph - Anantapur and Kurnool
ஆண்டவரின் நாம மகிமைக்காக சுமார் 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட CSI — 14,000 திருச்சபைகள், 3,300 கடவுளின் ஊழியர்கள், 104 மருத்துவமனைகள், 2,000 பள்ளிகள், 130 கல்லூரிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

0 Comments