Ad Code

எர்மே Hermas Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 126
எர்மே: பிறருக்கு நன்மையாக வாழும் வாழ்க்கை

1. பெயர்:  
எர்மே Hermas

2. அர்த்தம்: 
வளமை கொண்டவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
ரோமர் 16:14
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரிச் சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவுக்குள் உண்மையுள்ள சகோதரராக வாழ்ந்த எர்மே என்பவரைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• இவர் ரோமாபுரியிலிருந்த ஆரம்பகாலக் கிறிஸ்தவச் சபையில் முக்கியப் பங்கு வகித்த ஒரு விசுவாசியாக இருந்தார்.
• தொடக்கக்காலச் சபை வரலாற்றிலும் பாரம்பரியங்களிலும், இவர் டால்மேஷியா (Dalmatia) மற்றும் ஃபிலிப்பி பகுதிகளில் சுவிசேஷப் பணியாற்றி, அங்குள்ள விசுவாசிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
'எர்மே' என்ற பெயரின் பொருளுக்கேற்ப, நமது கிறிஸ்தவ வாழ்க்கை பிறருக்கு ஆசீர்வாதமாகவும் நன்மையாகவும் இருக்க வேண்டும். சொல்லிலும் செயலிலும் கிறிஸ்துவின் அன்பைப் வெளிப்படுத்தி, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நன்மைகளையும் நம்பிக்கையையும் அளிக்கும் பாத்திரங்களாக வாழ்வதே கடவுளுக்குப் பிரியமான வாழ்வாகும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

Post a Comment

0 Comments