Ad Code

நேரேயு Nereus Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 128
நேரேயு: இறைப்பணியில் தொடருதல்

1. பெயர்:  
நேரேயு Nereus

2. அர்த்தம்: 
நீரின் தலைவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
ரோமர் 16.15
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் இவரையும் இவரது சகோதரியையும் பெயர் குறிப்பிட்டு வாழ்த்துகிறார்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• நேரேயு ரோமாபுரி திருச்சபையில் இருந்த ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவர்
• தொடக்கக்கால கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி, இவர் பிலொலோகு மற்றும் ஜூலியா தம்பதியரின் மகனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
• ரோமானிய வரலாற்றுப் பதிவுகளின்படி, நேரேயு தனது சகோதரியோடு சேர்ந்து சுவிசேஷப் பணிக்காகத் தீவிரமாக உழைத்து, கிறிஸ்துவின் விசுவாசத்திற்காகத் தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சுற்றிலும் சவால்களும் துன்புறுத்தல்களும் நிறைந்த சூழலிலும், கிறிஸ்துவின் விசுவாசத்தில் உறுதியாக நிலைநின்று அவருக்கு உண்மையுள்ள சாட்சியாக வாழ வேண்டும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

Post a Comment

0 Comments