பிலொலோகு: இறை வார்த்தையை நேசி
1. பெயர்:
பிலொலோகு Philologus
2. அர்த்தம்:
வார்த்தையை நேசிப்பவர்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
ரோமர் 16.15
திருச்சபையில் இருந்த ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவர். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் இறுதியில் இவரைப் பெயர் சொல்லி வாழ்த்துகிறார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• பிலொலோகு ரோமாபுரி
பல தொடக்கக்கால வரலாற்றுப் பாரம்பரியங்களின்படி, இவர் ஜூலியா என்பவரின் கணவராகவும், நேரியு மற்றும் அவனது சகோதரியின் தகப்பனாராகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சினோப் (Sinope) நகரின் ஆயராக இவர் பணியாற்றி, கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக உண்மையாய் உழைத்தார் என்றும் தொடக்கக்கால திருச்சபை பாரம்பரியம் குறிப்பிடுகிறது.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தன் பெயரின் அர்த்தத்திற்கு ஏற்ப, இறை வார்த்தையை நேசித்து, அமைதியாகவும் உண்மையாகவும் ஆண்டவரின் பணியைச் செய்யும் விசுவாசிகள் கடவுளின் பார்வையிலும் திருச்சபையிலும் என்றும் மறக்கப்படுவதில்லை.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil
Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

0 Comments