பவுல் அடிகளார் மாற்றுத்திறனாளியா???வரலாறு....
பவுல் வாழ்ந்த காலத்தில் மாற்றுத்திறனாளி என்ற வார்த்தை நடைமுறையில் இல்லை. அந்தக் காலத்தில் நோய் / பலவீனம் / குறைபாடு என்றே கருதப்பட்டது. ஆனால் இந்தக் காலத்தில் பயன்படுத்தபடும் பொதுசொல்லான மாற்றுத்திறனாளி என்ற பதம் ஏன் அவருக்கு பொருந்தும்?
A. வரலாற்று ஆதாரம்
1. பவுல் மற்றும் தெக்லாவின் நடபடிகள்" (Acts of Paul and Thecla)
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த (கி.பி. 160-180) தள்ளுபடி ஆகம / அப்போக்ரிஃபா என்ற (Original Description) நூலில் ஓனிசிபோரு (Onesiphorus) என்பவர் பவுலைச் சந்திக்கச் செல்லும்போது, பவுலின் தோற்றத்தை பின்வருமாறு வர்ணிக்கிறார்:
"அவர் பவுலைக் கண்டபோது, அவர் உயரத்தில் சிறியவராகவும் (குள்ளமாகவும்), வழுக்கைத் தலையுடனும், வளைந்த கால்களுடனும் (Bow-legged / Bandy-legged), நல்ல உடற்கட்டோடும், ஒன்றிணைந்த புருவங்களோடும், நீண்ட மூக்கோடும், தேவ கிருபை நிறைந்தவராகவும் இருந்தார்..."
2. ஜான் கிறிசோஸ்டோம் (John Chrysostom - கி.பி. 4-ஆம் நூற்றாண்டு)
திருச்சபை பிதாக்களில் மிக முக்கிய உரையாசிரியரான ஜான் கிறிசோஸ்டோம், பவுலின் சரீர அமைப்பைக் குறித்துத் தனது உரைகளில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
பவுலை "மூன்று முழ உயரமுள்ள மனிதர்" ("The man of three cubits") என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் பவுல் மிகவும் குள்ளமான தோற்றமுடையவர் (சுமார் 4 அடி 6 அங்குலம்) என்பது தெரியவருகிறது.
3. யூசிபியஸ் (Eusebius of Caesarea - கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு):
திருச்சபை வரலாற்றாசிரியரான யூசிபியஸ், பவுல் அடிகளார் சரீர ரீதியாகப் பலவீனமானவராகவும், தொடர்ச்சியான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவராகவும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
4. தெர்துல்லியன் (Tertullian - கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டு):
தெர்துல்லியனும் Acts of Paul and Thecla நூலில் உள்ள வர்ணனையை முழுமையாக மறுக்காமல், பவுல் அடிகளாரின் வெளிப்புறத் தோற்றம் எளிமையாகவும், சரீர ரீதியாகப் பெரிய கம்பீரமற்றும் இருந்ததை உறுதிப்படுத்துகிறார்.
B. விவிலியத்தின் நேரடி ஆதாரங்கள் (New Testament Epistles)
2 கொரிந்தியர் 10:10 விளக்கம்: கொரிந்து நகரத்து மக்கள் பவுலின் நேரில் காணப்படும் தோற்றத்தையும் பேச்சையும் கம்பீரமற்றதாகவும் பலவீனமானதாகவும் கருதினர்.
2 கொரிந்தியர் 12:7-9 விளக்கம்: பல விவிலிய உரையாசிரியர்கள் (Theologians) இந்த "முள்" என்பதை ஒரு நாள்பட்ட சரீர உபாதை அல்லது பார்வையற்ற நிலை / தீவிர கண் நோய் (Chronic Ophthalmia) எனக் கருதுகின்றனர்.
நிறைவாக...
"தீவிர உடல் உபாதைகளையும் மீறி அற்புதமாகச் செயல்பட்ட ஒரு வரலாற்றுச் சுவிசேஷகர்" என்று குறிப்பிடுவதே வரலாற்று நியாயமாகும்.
மேயேகோ
9486810915

1 Comments
அப்போஸ்தலர் பவுல் கண்கள் கூச்சப் பார்வை உடையதாக, (கண்களில் பீளை வடிந்து) பார்க்க அருவருக்கத்தக்க அல்லது விரும்பாத தோற்றம் உடையவராக இருந்தார் என்பதை கலாத்தியர் 4:13-15 இல் அவரே குறிப்பிடுகிறார். இயேசு அவரை தமஸ்குவுக்கு போகும் வழியில் இடைமறித்து சந்தித்துப் போது பெரும் ஒளி தாக்கியதில் கண்கள் தற்காலிக பார்வை இழப்பையும், நிரந்த கண் தொந்தரவுகளையும் தந்தது என் கூறுகின்றனர். அதைத் தான் அவர் முள் என்கிறார். கண் உறுத்தல் இருந்தால் நாம் கூட முள் போல் உறுத்துகிறது என்று கூறுவதை கவனிக்கவும். தேவனுக்கே புகழ் உண்டாகுக! ஆமென்!
ReplyDelete