பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பெத்தலையில் பிறந்தாரையா
மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
பரிசுத்தர் பிறந்தாரையா
நமக்காக பிறந்தாரையா சந்தோஷம் தந்தாரையா
எந்தன் இயேசுவே..........
1.அரண்மனையில் பிறக்கவில்லை மாடிவீட்டில் பிறக்கவில்லை
தொழுவத்தில் பிறந்தாரையா
அரசனாய் வரவில்லை அதிகாரியாய் வரவில்லை
மனுஷனாய் வந்தாரையா
நமக்காக பிறந்தாரையா
நம்மைப்போல வாழ்ந்தாரையா
2.தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரையா
ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரையா
நாம் தேடி போகவில்லை
நம்மைத் தேடி வந்தாரையா
3.தாய் நம்மை மறந்தாலும் தந்தை நம்மை மறந்தாலும்
அவர் நம்மை மறக்கமாட்டார்
நண்பர் நம்மை மறந்தாலும் உற்றார் நம்மை மறந்தாலும்
அவர் நம்மை மறக்கமாட்டார்
கரம்பிடித்து நடத்திடுவார்
கன்மலைமேல் நிறுத்திடுவார்
0 Comments