ரோஜா பூக்களை அள்ளித் தூவுங்கள்...
ஹப்பி கிறிஸ்மஸ் என்று பாடுங்கள்
மெரி கிறிஸ்மஸ் என்று மகிழுங்கள்
ஆடி பாடி கொண் டாடுங்கள்
புது பாடல் பாடி வாழ்த்திடுங்கள்
1.மரியாஜோசப் தூதர்கள் கூட்டம் சுற்றிநின்று பாட
சின்னச்சிறிய மழலை இயேசு முன்னணைமீது தூங்க
வானம் வாழ்த்திட பூமி மகிழ்ந்திட
நட்சத்திரங்கள் மின்னிடவே ஒரே கொண்டாட்டம்
2.மின்மினிபோல மின்னிடும் ஸ்டார் வழிநடத்திச் செல்ல
பாலனின்அன்பை ஞானியரும் ருசித்து ருசித்து மெல்ல
பொன் தூபமும் வெள்ளைப் போளமும்
காணிக்கைகள் வைத்திடவே ஒரே கொண்டாட்டம்
0 Comments