இராகம் : பரம எருசலேமே.....
சின்ன பெத்லகேமே பரலோகம் வீட்டிறங்கினார்
உன்னிலுள்ள தொழுவினிலே அழகாக பிறந்தாரே
ஆஹா ஹப்பிகிறிஸ்மஸ் - கிறிஸ்மஸ் ஆஹா ஹப்பிகிறிஸ்மஸ்
1. பெத்லகேமே யூதாவில் சிறியதோ நீ?
பரலோகத்தைத் துறந்தவர் குரல் கேட்டேன்
தாய்மரியோ துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் உலகினில் வந்து விட்டார் - பணிவான பெத்லகேமே...
2.ஜீவ தேவன் உன்னினில் குடிபுகுந்தார்
தீர்க்கன் மீகா வாக்கும் நிறைவேறியது
நீதிதேவன் ஏழ்மைக் கோல மெடுத்தார்
தேவதுதர் களிப்பில் பாடி நின்றார். - யூதாவின் பெத்லகேமே...
3. சர்வசங்க அதிபதி பிறந்து விட்டார்
சர்வலோக மீட்பரும் வந்து விட்டார்
ஆடுமேய்க்கும் இடையரும் போற்றி நின்றார்
சாஸ்திரிகள் காணிக்கை கொண்டு வந்தார் - கனிவான பெத்லகேமே...
4.இருளின் மாந்தர் பேரோளி கண்டாரே
மரண இருள் தேசத்தில் விடுதலையே
பாவமென்னும் மன நோயில் விடுதலையே
நாதர் எனில் பிறப்பதால் விடுதலையே. - ஆஹாஎன் பெத்லகேமே...
0 Comments