தோள்கொடுக்கும் தோழர்களே....
நண்பர்கள் தினத்தில் மகிழ்வோடு வாழ்த்துகின்றேன்.
நட்பு என்பது மற்ற உறவுகளைப் போன்றது அல்ல. மற்ற உறவுகள் நாம் பிறக்கும் போதே நமக்கு சொந்தங்களாகிவிடுகின்றன. ஆனால் நட்பு மட்டுமே, நாம் பிறந்த பின்பு, வளர வளர நட்புணர்வும் நம்மோடு வளர்ந்து, நண்பர்களும் பெருகின்றார்கள். வாழ்க்கையின் சாரம்சம் நட்பின் ஆழத்தில் இருக்கின்றது எனலாம். ஆகவே தான் நட்பை பொறுத்து ஒருவரின் குணம் வெளிப்படுகின்றது. நல்ல நண்பர்களை அடையாளம் காண்பது எப்படி? click here
நண்பர்கள் தினத்தில் இதோ, நாம் சிந்திக்க.....
நல்ல நண்பர்களைப் புதிதாக சம்பாதித்து கொள்ள தயங்காதிருங்கள்;
அதே நேரத்தில் பழைய நண்பர்களை மறந்துபோய் விடாதிருங்கள்.
😊 Happy Friendship Day 🎈
சாலமோன் ஞானி சொல்லுகிறார், "உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி"(நீதிமொழிகள் 27.10).
இப்படிப்பட்ட நட்புறவால் இணைந்திருக்கும் நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்வு உண்டாக இறைவனை வேண்டுகின்றேன். கடவுளின் ஆசி உங்களுக்கு உண்டாவதாக.
0 Comments