Ad Code

அன்பின் சிந்தையோடு சேவை | Lovely Mind to Serve

C.M.S இன் அம்மா (Christian Mission Service) என்றழைக்கப்படும் இன்கிரீட் கவுஸ்கி (Ingrid Kowski) அவர்கள் ஜெர்மனியிலிருந்து இந்தியா வந்தவர்கள். இவர்கள் CMS நிறுவனத்தை நிறுவிய டாக்டர். ஹார்ஸ்ட் கவுஸ்கி-யின் மனைவி ஆவார். அனாதைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு தொண்டு நிறுவனம் தான் CMS . 
இவர் எப்போதும் ஏழை, எளிய, ஆதரவற்ற மற்றும் அனாதை குழந்தைகளின் தேவைகளை சந்திப்பிலும்,அவர்களை பராமரிப்பிலும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அக்குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டதுடன் உள்ளுர் பள்ளிகள் மூலம் கல்வியும் கற்பிக்கப்பட்டது. ஆன்மீக வாழ்விற்காக ஞாயிறு பள்ளிகள் நடத்தப்பட்டது.

ஒருமுறை ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அப்போது இன்கிரீட் அம்மா அவர்கள் அச்சிறுவனைக் கவனிப்பதிலேயே தன் நேரம் முழுவதையும் செலவிட்டார். மேலும் அந்த சிறுவன் வாந்தியெடுத்த போது இன்கிரீட் கவுஸ்கி அவர்கள் வாந்தியை கைகளில் ஏந்தினார்கள். பின்னர் சுத்தம் செய்து தன் கைக்குட்டையால் அவனைத் துடைத்து அரவணைத்தார்கள்.

தாராளமாக கொடுப்பவராக இருந்த இன்க்ரிட், குழந்தைகளின் நலனுக்காக தனது உடைமைகளை வழங்கியது மட்டுமல்லாமல் அவளுடைய நேரத்தையும் சக்தியையும் கொடுத்தார். CMS நிர்வாகத்தில் அவர் தன் கணவருக்கு உற்ற துணையாக இருந்தார்.  மார்ச் 15, 1995 ஆம் ஆண்டு தனது சொர்க்கவாசலுக்குப் புறப்படும் வரை அவருடைய அழைப்பில் உண்மையாக இருந்து சேவை ஆற்றினார்.

சிறுமைப்பட்டவர்கள் மேல் அவர்களுக்கு இருந்த அன்பின் சிந்தையே இன்று வரை நாம் அவர்களை நினைக்க காரணமாயிற்று.

பிலிப்பியர் 2 . 4 & 5 சொல்லுகிறது, அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.

Post a Comment

1 Comments

Anonymous said…
Super