✴️யோப்பா என்ற நகரம் எருசலேமிலிருந்து 50 KM தொலைவில் அமைந்துள்ள யூதேயாவின் முக்கியமான துறைமுகமாகும்.
✴️இன்றைக்கு யோப்பா (Joppa) என்ற பட்டணமானது, ஜாஃபா (Jaffa) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது டெல் ஆவிவ் (Tel Aviv) பகுதியில் காணப்படும் புறநகராகும்.
பழைய ஏற்பாட்டில் யோப்பா
எபிரேய பைபிளில் ஜாஃபா நான்கு முறை குறிப்பிடப்பட்டுள்ளது,
1. தாண் கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்ட பகுதிக்கு எதிரேயுள்ள ஒரு நகரம் (யோசுவா 19:46).
2. சாலாமோன் கட்டிய கோவிலுக்கு லெபனானின் சிடார்ஸ் நுழைவுத் துறைமுகம் (2 நாளாகமம் 2:16) ).
3. யோனா இந்த பட்டணத்து துறைமுகத்திலிருந்து தான் கப்பல் ஏறி கடவுளுக்கு கீழ்படியாமல் தர்ஷீசுக்கு சென்றார். (யோனா 1: 3)
4. மீண்டும் ஜெருசலேமின் இரண்டாவது கோவிலுக்கு லெபனானின் சிடார் நுழைவுத் துறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. (எஸ்ரா 3: 7).
புதிய ஏற்பாட்டில் யோப்பா
1. அப்போஸ்தலர் பேதுரு, யோப்பா பட்டணத்தானாகிய சீமோன் என்னும் தோல் பதனிடுகிறவன் வீட்டில் அநேக நாள் தங்கியிருந்தார். (அப்போஸ்தலர் 9.32 - 43)
2. தொற்காள் ( தபீத்தாள் ) என்ற சீஷி இந்த பட்டணத்தில் வாழ்ந்ததாகவும், நற்கிரியைகள் செய்ததாகவும் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அப்போஸ்தலர் 9.36)
3. யோப்பா பட்டணத்தில் முதலாம் நூற்றாண்டில் திருச்சபை காணப்பட்டிருக்கிறது. ஆதி காலங்களில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் தான் சபை கூடி ஆராதித்தியுள்ளனர்.
1 Comments