Ad Code

ஆண்கள் ஞாயிறு வழிபாட்டு முறைமை | Order of Men's Sunday Service

முகவுரை வசனம்

ஆரம்ப ஜெபம்

ஆரம்ப பாடல்

பாவ அறிக்கை
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:8-9). தாவீது அரசர் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டார் என்று இறைவாக்கினர் மூலம் தான் உணர்த்தப்பட்ட போது, ஆண்டவரிடம் பாவ மன்னிப்பிற்காக மன்றாடியது போல, நாமும் நம்முடைய பாவங்களை, சங்கீதம் 51 இன் வாயிலாக அறிக்கை செய்வோம். 

(சங்கீதம் 51 ஐ அனைவரும் சேர்ந்து வாசிப்போம்)

பாவ விமோசனம்
ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். (1 யோவான் 2:1-2)

கர்த்தருடைய ஜெபம்
பரமண்டல..... ஆமென்.

ஆ. ந.  ஆண்டவரே எங்கள் உதடுகளை திறந்தருளும்.
சபை. அப்பொழுது எங்கள் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
ஆ. ந. ஆண்டவரே எங்களை இரட்சிக்க விரைவாய் வாரும்.
சபை. ஆண்டவரே எங்களுக்கு சகாயம் பண்ணத் தீவிரியும்.
(எல்லாரும் எழுந்து நிற்க)
ஆ. ந. பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கு மகிமை உண்டாவதாக.
சபை. ஆதியிலும் இப்பொழுதும், எப்பொழுதுமான சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ஆ. ந. கர்த்தரைத் துதியுங்கள்.
சபை. கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

முறைமை சங்கீதம் - 24

அப்போஸ்தல விசுவாச பிரமாணம்
  வானத்தையும் பூமியையும்..... ஆமென்.

(உட்காருங்கள்)

பழைய ஏற்பாட்டுப் பாடம்

சிறப்புப் பாடல் / நிகழ்வு

நிருப வாக்கியம்

சிறப்புப் பாடல் / நிகழ்வு

நற்செய்தி பகுதி

ஜெபம் பண்ணக்கடவோம் (முழங்காலில்)
துதி செலுத்துதல்

மறுமொழி: கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. 

1.  வேதாகம விசுவாச தகப்பன்மார்கள், தீர்க்கர்கள், அப்போஸ்தலர்கள் மற்றும் அனைத்து இறைப் பணியாளர்களுக்காக கர்த்தரை துதிப்போமாக...

2.  இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்ற திருமண்டல மாநாட்டிற்காக, சபைமன்ற மாநாடுகளுக்காக, சேகர பண்டிகைகளுக்காக மற்றும் ஆண்கள் ஐக்கிய சங்க கூடுகைகள் மூலம் கடவுள் எழுப்பி தந்த சாட்சிகளுக்காக கர்த்தரைத் துதிப்போமாக...

3. ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் மூலம் வெளியிடப்படும் தூண்கள் பத்திரிக்கை ஊழியம், முதியோர் உதவிததொகை வழங்குதல் மற்றும் சமூக சேவைகள் வாயிலாக அநேகர் நன்மைகள் பெறுவதற்காக கர்த்தரைத் துதிப்போமாக...

மன்றாட்டு குறிப்புகள்

மறுமொழி: எங்கள் விண்ணப்பம் உம்மிடத்தில் சேர்வதாக.

1. திருநெல்வேலி திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க தலைவரான பேராயர்......., செயலர்..... இயக்குநர் மற்றும் அனைத்து சபை மன்ற ஊழியர்களும் அப்போஸ்தலர் பவுலடிகளார் போல இறைப்பணியாற்ற ஆண்டவரை நோக்கி மன்றடுவோமாக...

2. நமது திருமண்டலத்தில் அனைத்து சபைகளிலும் ஆண்கள் ஐக்கிய சங்கம் ஏற்படுத்தப்பட்டு, ஜெபம் ஐக்கியம், சேவையில் வளர்ந்து பெருகி, கொர்நெலியுவைப் போல் திறம்பட செயல்பட வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி மன்றடுவோமாக...

3. நமது தேசத்தில், திருமண்டலத்தில், திருச்சபையில் முக்கிய பதவிகளில் இருக்கிற யாவரும் மோசேயைப் போல தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையும் உத்தமமாக செயல்பட வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி மன்றடுவோமாக...

4. நமது சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளாகிய வரதட்சணை, வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், ஏழைகள் ஒடுக்கப்படுதல் மற்றும் சாதி இன வேறுபாடுகள் போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்த தீர்க்கன் நாத்தான் போல் நம்மை ஆண்டவர் பயன்படுத்த வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி மன்றடுவோமாக...

5. முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோசேப்பு என்பவர்கள் போல் எங்கள் திருச்சபையின் ஆண்கள் விசுவாசத்திலும், தியானத்திலும், ஜெபத்திலும், பரிசுத்தத்திலும் நிலைபெற்றோங்கி எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி மன்றாடுவோமாக...
சுருக்க ஜெபம்: (சுருக்க ஜெப புத்தகம்)

(உட்காரவும்)

அறிவிப்புகள்

பிரசங்க ஆயத்த பாடல்

அருளுரை

(எழுந்து நின்று)
காணிக்கை பாடல்

நிறைவு ஜெபம்

ஆசீர்வாதம்
கடவுளுடைய பராமரிப்புக்கும் கிருபைக்கும் உங்களை ஒப்புவிக்கிறோம். பிதா குமாரன் தூய ஆவியானவராகிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளின் ஆசீர்வாதம் உங்களுடனே கூட சதாகாலங்களிலும் இருப்பதாக.

முடிவு கவி

பின்னுரை
ஆ. ந. கர்த்தர் உங்களோடிருப்பாராக.
சபை. அவர் உமது ஆவியோடும் இருப்பாராக.

ஆ. ந. இறை சமாதானத்தோடு சென்று வாருங்கள்.
சபை. கர்த்தருடைய நாமத்தினாலே, ஆமென்.



துணை நின்ற நூல்கள்
ஜெப புஸ்தகம் - திருநெல்வேலி திருமண்டலம்
ஆண்கள் ஞாயிறு ஆராதனை முறைமை - தி. தி
ஆண்கள் ஐக்கிய சங்கம்







Post a Comment

0 Comments