☺️சர்வதேச மகிழ்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலுமுள்ள மக்கள் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
☺️2011 ஆம் ஆண்டில், ஐநா பொதுச் சபையானது, பொருளாதார வாய்ப்பைப் போலவே மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பதை "அடிப்படை மனித இலக்கு" என்பதை தீர்மானமாக ஏற்றுக்கொண்டது. பின்னர், சர்வதேச மகிழ்ச்சி தினமானது, 28 ஜூன் 2012 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
☺️2013 இல், ஐ.நா.வின் அனைத்து 193 உறுப்பு நாடுகளும் உலகின் முதல் சர்வதேச மகிழ்ச்சி தினத்தைக் கொண்டாடின. மேலும் அது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
☺️எல்லாம் வல்ல கடவுள் தான் மகிழ்ச்சியின் மூலதனமான பிறப்பிடம். நாம் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அவருக்குள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதுவே நிரந்தர சந்தோசம். அதை யாராலும் பறித்துக் கொள்ள முடியாது.
☺️நம் வாழ்வின் அனைத்து மகிழ்ச்சிகளைக் கொண்டாடவும் களிகூரவும் ஒரு நாள் போதுமானதாக இருக்காது, ஆனால் உறவுகளோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க இது ஒரு சிறந்த தருணம். எனவே, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சில தனித்துவமான சர்வதேச மகிழ்ச்சி தின வாழ்த்துகளை வெளிப்படுத்தி, மகிழ்ச்சியைப் பரப்புங்கள்!
0 Comments