Ad Code

நீயுனக்கு சொந்தமல்லவே | Neeyunakku Sonthamallave | Lent Songs

நீயுனக்கு சொந்தமல்லவே 
- மீட்கப்பட்ட பாவி
நீயுனக்கு சொந்தமல்லவே;
   நீயுனக்கு சொந்தமல்லவே
   நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்.

1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே திரு ரத்தம் ரத்தம்
திரு விலாவினில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே.

2. இந்த நன்றியை மறந்து போனாயோ? இயேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்தத முனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடை யதல்லவோ?

3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காடியே
அக்கினிக் கடல் தள்ளுவானேன்?

4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகை விட்டு
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர் பதவியில் என்றும் பிழைப்பாய்

Post a Comment

0 Comments