Ad Code

ஓகோ! பாவத்தினை விட்டோடாயோ? | Ooho Paavaththinai Vittotaayo? • Lent Songs

ஓகோ! பாவத்தினை விட்டோடாயோ?
உள்ளமே, இயேசு அன்பை நாடாயோ?

1. மா கிருபையாக ஏகன் அன்பாயாக
வந்ததிலையோ பூவில் உனக்காக?

2. நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்
நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்?

3. யூதர்கள் வைய வேதனை செய்ய 
உன்பவம் செய்த தவர் உளம் நைய

4. சிலுவையில் இருக்க உலகரும் நொறுக்கச்
செய்ததுன் பவம் மேசியா இறக்க

5. அலகை உன் மீது பல வகைத் தீது
ஆவலுடன் செய்வதால் புவி மீது

6.ஐயோ! என் மனமே வையகம் வனமே
அழியா உலகில் அன்புற்ற னுதினமே.

Post a Comment

0 Comments