Ad Code

பாரீர்! கெத்செமனே பூங்காவில் | Paariie Gethsamane Punkaavil En Nesaraiye | Lent Songs

பாரீர்! கெத்செமனே பூங்காவில்
என் நேசரையே - பாவி
யெனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே.

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமந் தவராய்
தேவாதி தேவன் படும்
பாடுகள் எனக்காகவே
         
2. அப்பா இப்பாத்திரமே நீங்கும்
நின் சித்தமானால்
உம் சித்தம் செய்ய என்னைத்
தத்தம் செய்தேன் என்றாரே

3. இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே
            
4. மும்முறை தரை மீதே
தங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தமே வீழ்ந்து
ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே.

5. அன்பின் அருள் மொழியால்
ஆறுதல் அளிப்பவர் - துன்ப
வேளையில் தேற்று வாரின்றியே
பாதகர் அலறுகின்றார்.

Post a Comment

0 Comments