1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே
உள்ளபடி வாவேன்.
2. உன்றனுக்காவே நானேயடிப்பட்டேன்
உன் பாவத்தை சுமந்தேன்;
சிந்திய என்திரு இரத்தத்தால் உன்பாவம்
தீர்த்து விட்டேன் பாவி வா.
3. கொடிய பாவத் தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்
ஒன்றுக்கும் அஞ்சாதே வா
4.விலக யாதொரு கதியில்லாதவல்
உலகை நம்பலாமோ?
சிலுவை பாவிகளடைக் கலமல்லோ?
சீக்கிரம் ஓடி வாவேன்.
0 Comments