உறக்கம் என்பது வாழ்க்கையின் இயல்பான அம்சமாகத் தோன்றலாம்; ஆனால் அதன் முக்கியத்துவம் இன்றியமையாதது.
உறக்கத்தைக் கொண்டாடும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வை அடிப்படையாக கொண்டு 2008 ஆம் ஆண்டு முதல் உலக உறக்க தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் (Friday before Spring Vernal Equinox of each year) ஸ்பிரிங் வெர்னல் ஈக்வினாக்ஸுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை வரும்.
உலக உறக்க தினம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்பிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு உதவக்கூடிய மதிப்புமிக்க ஆதாரங்களை (Valuable Resources) வழங்குவதன் மூலம் மக்கள் தூங்குவதைப் பார்க்கும் மற்றும் அனுபவிக்கும் விதத்தை மாற்றுவதற்கும் இந்த நாள் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் தீவிரமான தூக்கப் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக உறக்க தினக்குழு
வினால் (World Sleep Day Committee ) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நாள், தூக்க மருத்துவம் மற்றும் தூக்க ஆராய்ச்சிப் பகுதியில் படித்து வரும் சுகாதார வல்லுநர்கள் மற்றும் வழங்குநர்களின் குழுவுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன காலத்தில், தவறான பழக்கவழக்கங்கள், தவறான உணவு, மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கம் ஆகியவற்றால் மக்கள் பல்வேறு நோய்களால் தொந்தரவுபடுகிறார்கள். மோசமான தூக்கம் மற்றும் மன அழுத்தம் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். உலக தூக்க சங்கத்தின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதன் மூலம் போதிய உறக்கம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பரப்பப்படுகிறது.
கிறிஸ்தவ திருமறை சொல்லுகிறது (சங்கீதம் 127:3): "நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; கடவுளே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்." நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், இறைநம்பிக்கையோடு கடவுளைத் தேடி வாழுங்கள். தினமும் நன்றாக உழைப்தோடு ஓய்வுமெடுத்து வாழ்வை வளமாக்குங்கள்.
0 Comments