Ad Code

துணிச்சல்மிக்க தூயர் அதனாசியஸ் | Courageous St. Athansius | Athansius against Arianism


தப்பறைக் கொள்கைகளுக்கு மிகப்பெரிய சம்மட்டியாய் விளங்கிய அதனாசியஸ் (Athansius) கி.பி. 295 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள அலெக்ஸ்சாந்திரியா என்னும் நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் யார் என்ற குறிப்பு தெளிவாக இல்லை. அலெக்ஸ்சாந்திரியா நகர ஆயருக்குச் செயரலாக இருந்து, பின்னர் ஆயராகவே உயர்ந்த அத்தனாசியஸ் 

அத்தனாசியாரின் காலத்தில் ஆரியஸ் (Arius)  என்னும் குருவானவர் ஆரியபதம் (Arianism) என்னும் தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்தார். இக்கொள்கை இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை (Divinty of Jesus)  மறுத்து வந்தது. ஆரிய பதத்தை மிகக் கடுமையாக எதிர்த்து, இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை நிறுவுவதற்கு அதனாசியாஸ் பாடுபட்டார். இதற்கிடையில் 325 ஆம் ஆண்டு நைசேயா (Nicaea) சங்கம் கூடியது. இச்சங்கம் ஆரியபதத்தைக் கடுமையாக எதிர்த்தது. மட்டுமல்லாமல் அத்தப்பறைக் கொள்ளையைப் பரப்பி வந்த ஆரியஸ் என்னும் குருவை திருச்சபையிலிருந்து வெளியேற்றியது.

இவ்வாறு திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆரியஸ் தன்னோடு ஒருசில ஆட்களைச் சேர்ந்துக்கொண்டு ஆயர் அத்தனாசியசுக்கு மிகவும் தொல்லை கொடுத்துக்கொண்டே வந்தார். எந்தளவுக்கு என்றால் ஏறக்குறைய பதினேழு ஆண்டுகள் அவர் அலெக்ஸ்சாந்திரிய நகரில் ஆயராக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்படியிருந்தாலும் அத்தனாசியஸ் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இப்படி திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் தப்பறைக் கொள்கைகளிலிருந்தும் காப்பாற்றிய அத்தனாசியஸ் 373 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

தூய அத்தனாசிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடம் இருந்த துணிச்சல்தான். அத்தனாசியசைப் பற்றி சொல்லப்படுகின்ற ஓர் சொல்லாடல் “Athanasius Against the World” என்பதாகும். அதாவது தூய அத்தனாசியஸ் இந்த உலகப் போக்கில் வாழவில்லை. உலகம் காட்டுகின்ற நெறிகளுக்கு எதிராகவே வாழ்ந்தார். அதனால் அவர் நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்தார். அவருக்கு தன்னுடைய பனிக்காலம் முழுவதும் எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் தன்னுடைய கொள்கையில் மிக மிக உறுதியாக இருந்தார். தூய அத்தனாசியாரிடம் இருந்த துணிச்சலை நம்மிடமும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

யோசுவா 1.9 இல் ஆண்டவராகிய கடவுள் யோசுவாவிடம் சொன்னது:  “வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமானா நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.”

Post a Comment

0 Comments