கன்னியாகுமரி பேராயம் தென்னிந்திய திருச்சபையிலுள்ள (Church of South India) 24 திருமண்டலங்களில் ஒன்றாகும். சி.எஸ்.ஐ. கன்னியாகுமரி பேராயம் 1959 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
கன்னியாகுமரி பேராயம் கன்னியாகுமரி வருவாய் மாவட்டம் முழுவதிலும் மற்றும் திருநெல்வேலி வருவாய் மாவட்டத்திலுள்ள கங்கனாங்குளம் மற்றும் லெவிஞ்சிபுரம் பகுதிகளிலும் சபைகளைக் கொண்டுள்ளது.
கன்னியாகுமரி பேராயத்தின் தலைமை ஆலயம் (Cathedral) மைலாடியிலுள்ள ரிங்கெல்டாப் வேதமோனிகம் நினைவு தேவாலயம் ஆகும். இது ஆசியாவிலேயே மிகப் பெரிய மற்றும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். 2006 ஏப்ரல் 25 அன்று "200வது ரிங்கெல்டாப் & வேதமோனிகம் நினைவு நாளன்று" மைலாடி தேவாலயம் கன்னியாகுமரி பேராலய கதீட்ரல் ஆக உயர்த்தப்பட்டது.
திருவிதாங்கூரின் முதல் புராட்டஸ்டன்ட் தேவாலயமான மைலாடி ஆலயம் மே 1809 இல் தெற்கு திருவிதாங்கூரிலுள்ள (தற்போதைய கன்னியாகுமரிலுள்ள) மைலாடியில் அடிக்கல் நாட்டப்பட்டது. நான்கு மாத தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு, சிறிய தேவாலயம் செப்டம்பரில் 1809 செப்டம்பரில் LMS மிஷனரி Rev.ரிங்கெல்டாப் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒற்றை விதையான மைலாடி சிஎஸ்ஐ ஆலயம், தற்போது ஆலமரம் போல் பரவி, மூன்று திருமண்டலங்களாக கன்னியாகுமரி பேராயம், தெற்கு கேரள பேராயம் கொல்லம்-கொட்டாரக்கரா பேராயம் ஆக வளர்ந்துள்ளது.
கன்னியாகுமரி பேராயத்தில் 4,91,762 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சொத்துக்கள், நிதி மற்றும் சேமிப்புகள் சுமார் ரூ. 600 கோடி உள்ளது (2020). பல்வேறு மிஷன் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திருமண்டலத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
பணி செய்த பேராயர்கள்
1959–1973 : I.R.H. ஞானதாசன்
1973–1979 : C.செல்வமணி
1980–1997 : G. கிறிஸ்துதாஸ்
1997–2000 : M. I . கேசரி
2000–2018 : ஞானசிகாமணி தேவகடாட்சம்
2019 – : A.R. செல்லையா
பேராய லோகோ
0 Comments