*******************************************
சி. எஸ்.ஐ. தோற்றம்: 27.09.1947
செம்பொருள்: திறந்த உலகில் திறந்த திருச்சபை
*******************************************
உள்ளம் மகிழுது
உம்மைப் புகழுது - தென்
இந்திய திருச்சபை
விந்தையாய் ஒளிருது
பாதை திறக்குது
எல்லை விரியுது
பவள விழாவில்
அருள் மழை பொழியுது
நட்பாய் உறவாய் திகழுது
வாழ்வின் பேழையாய் விளங்குது
சுமை சுமப்போர்க்கு
சுமை தாங்கி - இருளை
அகற்றிடும் சுடர் ஒளி
அண்டி வருவோர்க்கு
அடைக்கலம்
பிரிவினைப் போக்கிடும்
இணைப் பாலம்
******************************************
எழுதியவர்: அருட்திரு. ஜெகதீஷால் ரெகு
இராகம்: திரு. ஜேம்ஸ் வசந்தன்
0 Comments