இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிறித்தவ சபை அமைப்பாகத் திகழும் தென்னிந்திய திருச்சபை (Church of South India) தனது பவள விழாவை (1947 - 2022) கொண்டாடுகின்றது.
வரலாற்று சிறப்புமிக்க இவ்விழாவின் செம்பொருள் "திறந்த உலகில் திறந்த திருச்சபை" (Envisioning Together Open Church in the Open World). இவ்விழாவின் கருத்துப் பாடல் "உள்ளம் மகிழுது..." அவர்களால் எழுதப்பட்டது. click here to watch theme song video
தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதாடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புராட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து அமைக்கப்பட்ட தென்னிந்தியத் திருச்சபை 27.09.1947 அன்று சென்னையிலுள்ள தூய ஜார்ஜ் பேராலயத்தைத் தலைமையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. click here to go CSI History
தென்னிந்தியத் திருச்சபையானது தென் இந்தியா மற்றும் இலங்கை மொத்தம் 24 திருமண்டலங்கள் உள்ளது. இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிறித்தவ சபை அமைப்பாகத் திகழ்கிறது. click here to read CSI 24 Dioceses
அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (That they all may be one) என்னும் விவிலியக் கூற்று தென்னிந்தியத் திருச்சபையின் விருதுவாக்காகவும் உள்ளது. click here to read CSI logo & motto இந்த 75வது ஆண்டில் பவள விழாவைக் கண்டு ஆசாரிக்கும் பாக்கியம் பெற்ற நாம் யாவரும் இணைந்து செயல்பட்டு, கிறிஸ்துவின் மந்தைக்குள் அனைவரையும் இணைக்க முன் வந்து உழைப்போம்; ஜெயம் பெறுவோம்; இந்தியா இயேசுவுக்கே!!!!
0 Comments