முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். கிருபை என்றால் என்ன? கடவுளின் பேரன்பே கிருபை. எதற்கும் தகுதியற்ற நம் மீது அவர் வைத்துள்ள அந்த பேரன்பு தான் கிருபை. அந்த கிருபையை நம்மால் அளவிட முடியாது. சங்கீதம் 17.07 சொல்லுகின்றது, "உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்."
1. வியத்தகு கிருபையின் அதிசயம்
சங்கீதம் 17. 7 இல் சங்கீதக்காரன் அந்தக் கிருபையை "அதிசயமான கிருபை" என்று வருணிக்கின்றார். அதிசயம் என்றால் வியத்தகு என்று பொருள். ஆண்டவரின் கிருபை வியக்கப்படவைக்க வகையில் அதிசயமானது.
2. நம்பிக்கையோடு ஜெபித்தால் அதிசயம்
சங்கீதம் 17 இன் முகவுரையில் "தாவீதின் விண்ணப்பம்" என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சங்கீதத்தில் தாவீது அரசர், நம்பிக்கையோடு, கடவுள் தம்முடைய அதிசயமான கிருபையை தன் வாழ்வில் விளங்கப்பண்ண வேண்டுமென்று ஜெபிக்கின்றார். இங்கு என்ன அதிசயம் என்றால், பகைவரின் கையின்று தப்புவித்து விடுவிக்கும் அதிசயமே.
3. கிருபையை விளங்கப்பண்னும் அதிசயம்
கடவுள் தம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும் முறையும் அதிசயம். அதைக் குறித்து சங்கீதம் 31.21 இல் வாசிக்கிறோம்: "கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்." கடவுளின் கிருபையை வெளிப்படுத்தும் விதமும் அதிசயமே.
நிறைவுரை
கடவுளின் அதிசயமான கிருபை அதிசயமாக நம்முடைய வாழ்வில் விளங்க வேண்டும் என்றால் நாம் அவரைச் சார்ந்து, அவர்மீது நம்பிக்கையுள்ளவர்களாய் வேண்டும். அப்போது, அவரது அதிசயமான கிருபையை நாம் வியக்கத்தக்க வகையில் நம்முடைய வாழ்வில் விளங்கப்பண்ணுவார். இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments