பாலசீர் லாரி (24 பிப்ரவரி 1921 - 24 பிப்ரவரி 1989) என்பவர் உலகப் புகழ் பெற்ற ஒரு இந்திய போதகர். ஆரம்ப நாட்களில் பாலாசீர் லாறிக்கு பிரசங்கிக்க சரியாக வருவதில்லை. ஆனால் இரவு நேரத்தில் எல்லாரும் படுக்கச் சென்றால், இவர் மாத்திரம் முழங்கால் படியிட்டு "ஆண்டவரே கிருபை தாரும்" என்று தேவனிடத்தில் மன்றாடுவார். காலையில் எல்லாரும் எழும்பும்போது பார்த்தாலும் அவர் இரவில் ஆரம்பித்த அதே ஜெப நிலையில்தான் இருப்பார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் தேவன் பயன்படுத்திய மனிதர்களில் பாலாசீர்லாறி போன்று எவரையும் பயன்படுத்தவில்லை என்று சொல்லும் அளவுக்கு பிரசித்தி பெற்றார். இவருடைய கூட்டங்களில் திரளாய் அற்புதம் நடைபெறுவதுண்டு. இவருடைய நிழல் படும் இடங்களில் எல்லாம் அற்புதம் நடந்தது. அதற்காக இவருடைய நிழல் அனேகம் பேர் மீது பட வேண்டும் என்பதற்காக பெரிய விளக்குகள் மூலம் ஏது செய்தனர்.
ஆனால் இவரின் முடிவு என்ன?திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறினார். பின்பு சிறிது காலத்தில் கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒன்றே என்றார். அதன்பின்பு நானே கலியுகக் கல்கிபகவான் என்று கூறினார். தனக்கு மரணம் கிடையாது என்று கூறினார். சொல்லி சில நாட்களிலேயே மரித்தும் போனார். இன்றும் இவருடைய ஆசிரமம் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை - தென்காசி மெயின் ரோட்டில் உள்ளது. கூழையும் கஞ்சியையும் குடித்துக் கொண்டு வஞ்சிக்கப்பட்ட ஒரு கூட்டம் உலக மக்கள் போல் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றது. 1969 இல் பாலாசீர் லாறி கல்கி அவதாரமாக அறிவிக்கப்பட்ட ஜூலை மாதம் 21ம் நாளை விழாவாக கொண்டாடுகிறார்கள்.
கிறிஸ்துவின் அடியார்களே...
கவனமாயிருங்கள்! இன்றைக்கும் விழுந்து போன ஊழியர்கள், மக்களை வஞ்சிக்கின்ற வகையில் ஏராளமான காரியங்களை உபதேசித்தும், போதித்தும் வருகின்றனர். மனிதர்களின் ரசிகர்களாக இல்லாமல் கிறிஸ்துவின் சீடர்களாக பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் வாழ்வோம்.
1 Comments