Ad Code

🌲 கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்பு மற்றும் பின்னணி | Christmas Tree 🌲


கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்பு
🌲 கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கிறிஸ்தவர்களின் வீடுகளில் கிறிஸ்துமஸ் காலங்களில் இம்மரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைப்பது வழக்கமாகும். 

🌲 பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் ஏனைய கிறிஸ்துமஸ் அழகூட்டப் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் தாத்தா வரலாறு வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

🌲 கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது கிறிஸ்மஸ் மரத்தின் சிறப்பம்சம். அதேபோல கிறிஸ்மஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் மூன்று பரிமாணங்களைக் குறிப்பதாகவும் எனவே இயேசு மனித உருவான நாளை மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தமுடையது என்றும் கிறிஸ்தவ விளக்கங்கள் பரிமாறப்படுகின்றன. 

கிறிஸ்துமஸ் மரத்தின் பின்னணி
🌲 ஜெர்மனியே கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது. ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்ற பாதிரியார் அங்குள்ள மக்கள் ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக்கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு கிறிஸ்மஸ் மரம் முளைத்து வளர்ந்ததாகவும் அதன் வாயிலாக, அந்த மரம் முளைத்த செயலை இயேசுவின் உயிர்ப்போடு தொடர்பு படுத்தி தன்னுடைய கிறிஸ்தவ போதனையை மும்முரப்படுத்தினதாகவும் சொல்லப்படுகின்றது. 

🌲 அப்போதெல்லாம் அந்த மரம்  அலங்காரப் பொருளாகவோ, கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படவோ இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும்,  ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்மஸ் மரத்தை முதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்மஸ் மரங்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

🌲 சுமார் கிபி 1500 ஆண்டுகளில் வாழ்ந்த மார்ட்டின் லூத்தர் கிங் என்ற மன்னர் ஒரு கிறிஸ்மஸ் கால பனி நாளில் பனி படந்த சாலை வழியாக நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்கவைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஃபிர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார் என்ற செய்தியும் உள்ளது.

🌲 1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டுவந்து விழா கொண்டாடியதே கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் மர அலங்காரம் வெகுவாகப் பரவிவிட்டது.

🌲 இங்கிலாந்து அரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு. அப்படிப்பட்ட பயணங்கள் அவருக்கு ஜெர்மனிநாட்டு இளைஞர் இளவரசர் ஆல்பர்ட் டுடன் காதலை வளர்த்தன. திருமணம் செய்துகொண்ட இருவரும் இங்கிலாந்து திரும்பினார்கள். 1841ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின் இங்கிலாந்து பிரவேசம் என்ற கதையும் உண்டு.

🌲 உலக அளவில் 16 வகையான கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளன. இவற்றில் அதிகம் ஃபர் (fir tree) வகை மரங்களே பயன்படுத்தப்படுகிறது. பர் வகை என்றால் ஊசி இலை கொண்ட முக்கோண வடிவ மரங்கள். இந்தியாவில் அரக்குவாகரியா கொலம்னரிஸ் (Araucaria columnaris) என்ற ஆஸ்திரேலிய வகை மரம் கிறிஸ்துமஸ் மரமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மரம் கிடைக்காதவர்கள் சவுக்கு (casuarina) மரத்தை கிறிஸ்துமஸ் குடில் அருகில் வைப்பார்கள். 

🌲 இன்றைக்கு பிளாஸ்டிக் மற்றும் பலவித பொருட்களின் மூலம் இந்த கிறிஸ்துமஸ் ட்ரீ பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றது. 

🌲 கிறிஸ்துமஸ் மரம் போன்று நம் வாழ்வும் பசுமை மாறா வாழ்வாக, நற்குணங்கள் என்னும் ஒளி விளக்குகளாலும், நற்கிரியைகள் என்னும் அலங்கரிப்பு பொருட்களாலும் எப்போதும் இருக்கட்டும்...

Post a Comment

0 Comments