Ad Code

கொய்னோனியா என்பது என்ன? | Koinonia Word Study

கொய்னோனியா என்ற வார்த்தையை ஒரே அர்த்தத்தில் அதை அடக்கிவைக்கமுடியாது. ஏனெனில் இநத வார்த்தையின் அர்த்தம் மிகவும் ஆழம் நிறைந்தது ஆகும். கொய்னோனியா (κοινωνία - koinōnía) என்ற கிரேக்க வார்த்தைக்கு "பொதுவாக எதையாவது வைத்திருத்தல்" என்று சொல்லலாம். இது கூட்டுறவு (Fellowship / Communion), கூட்டுப் பங்கேற்பு (Joint Participation), ஒன்று சேர்ந்து பங்களித்தல் (Joint Contribution / sharing) போன்ற கருத்துக்களைக் குறிக்கிறது. 

இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் பலவிதமான சூழல்களில் வருகின்றது (எ.கா. பிலி. 2:1-2, அப்போஸ்தலர் 2:42, 1 யோவான் 1:6-7). "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும் (கொய்னோனியாவிலும்), அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (அப்போஸ்தலர் 2:42). கொய்னோனியா என்பதை தமிழில் அந்நியோந்நிய ஐக்கியம் அல்லது கூடட்டுறவு என்று சொல்லலாம்.

கொய்னோனியா வாழ்வின் பண்புகள்
✨தேவனோடுள்ள உறவு (Relationship with God)
✨ கூட்டாளி உறவு (Fellowship)
✨சுயநலமில்லாமல் கொடுப்பது (Sharing)

சிறப்பாக, கொய்னோனியா வாழ்வில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்தல் என்பது மையமாகும். அதாவது, "ஒருவருக்கொருவர் உதவுதல்" என்பது கொய்னோனியாவின் நடைமுறை வெளிப்பாடாகும். கைமாறு கருதாமல் உதவுவது மற்றும் பிறர் நமக்கு துன்பம் விளைவித்திருக்க அவருக்கு நாம் நன்மை செய்வது என்பவற்றைக் குறிக்கும்.

Post a Comment

0 Comments