Ad Code

கிறிஸ்தவர்களுக்கான பொன்மொழிகள் • Tamil Quotes for Christians

⚡கிறிஸ்தவர்களாக நமது கடமை என்னவென்றால், எப்பொழுதும் பரலோகத்தை நமது கண்களிலும் பூலோகத்தை நமது காலுக்கடியிலும் வைப்பதாகும். - மேத்யூ ஹென்றி.

⚡ கிறிஸ்தவனாய் இருப்பது என்பது வெறுமனே கிறிஸ்துவை விரும்புவதல்ல, கிறிஸ்துவைப்போல இருப்பதாகும். கிறிஸ்துவைப்போல இருக்காதவன் கிறிஸ்துவை விரும்பாதவன். - தெரேசா வெஸ்ட்.

⚡ தேவனுடைய காரியங்களில் நம்மை வெகு பக்திவைராக்கியமாக பேச வைத்து, அதின்படி வாழச் செய்யாமல் இருக்கப்பண்ணுவதும் நம்முடைய எதிரியாகிய சாத்தானின் வேலை தான்! தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்தில்தான் உண்டாயிருக்கிறது என்பதை நாம் எப்போதும் உணர வேண்டும்!  - அ.செல்வகுமார்.

⚡கிறிஸ்துவின் போதனைகளின்படி, உண்மையான தேவபக்தி வெளிப்புறமானதல்ல, ஆனால் உள்ளானது. பிரதானமாக, அது மனித வாழ்க்கைக்கான தேவனின் ஈவு. அந்த ஈவின் விளைவாகவே ஆவிக்குரிய கனிகள் பின் தொடர்ந்து வருகின்றன.  - ஜார்ஜ் ஃபோர்டு.

Post a Comment

0 Comments