1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: (குருத்தோலை ஞாயிறு) கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் ஞாயிறு
தேதி: 2/4/2023
வண்ணம்: கருநீலம்
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
கிறிஸ்துவே அமைதியின் அரசர் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். யோவான் 12:13 (பவர் திருப்புதல்)
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், "ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். யோவான் 12:13 (திருவிவிலியம்)
3. ஆசிரியர் & அவையோர்
இடி முழக்கத்தின் மக்கள் என்று அழைக்கப்பட்ட செபதேயுவின் புதல்வரும் யாக்கோபின் சகோதரரும் அபோஸ்தலருமான யோவான் எழுதிய நற்செய்தி நூல் இதுவாகும். முதல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. குறிப்பாக இச்சமூகம் "யோவானின் சமூகம்" (Johannaine Community) என்று அறியப்படுகிறது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கிபி 70-இன் எருசலேமின் அழிவுக்கு பின்பும் பத்மு தீவுக்கு யோவான் நாடுகடத்தப்படுவதர்க்கு முன்பும் இந்த நற்செய்தி நூல் எழுதப்பட்டது. சுமார் கிபி 80- க்கும் கிபி 90- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பொய் போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி இயேசு மாம்சத்தில் வெளிப்படவில்லை என்று துர் உபதேசத்தை பரப்பினர். இதற்கு பதில் கூறும் விதமாகவும் இயேசு மாம்சத்தில் பிறந்தார் என்றும் அவர் கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்றும் மற்றும் மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார் என்று சாட்சி கூறவும் யோவான் இந்த நற்செய்தி நூலை எழுதினார்.
5. திருவசன விளக்கயுரை
யோவான் நற்செய்தி நூலின் 12-ம் அதிகாரம் பொது மக்களிடையே (Public Ministry) இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் நிறைவு பகுதியை குறித்து விளக்குகிறது. 12-ம் அதிகாரத்தின் இரண்டாவது பகுதி (12:9-19) இயேசு கிறிஸ்துவின் வெற்றி பவனியை மையப்படுதுகிறது. இது நான்கு நற்செய்தி பகுதிகளிலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், யோவான் இந்த பகுதியை மற்ற நற்செய்தி பகுதிகளிலிருந்து சற்று வித்தியாசமாக எழுதியிருக்கிறார்.
வசனம் 12-ல் இயேசு பெத்தானியாவிலிருந்து, எருசலேமுக்கு மறுநாளிலே பயணத்தை ஆரம்பிக்கிறார். இங்கு மறுநாள் என்பது ஞா. கிழமையை குறிக்கிறது (வசனம் 1). எருசலேமில் திரள் கூட்டமான ஜனங்கள் பஸ்கா பண்டிகை முன்னிட்டு நியாயா பிரமாணத்தின் முறைப்படி தங்களை சுத்திகரித்து கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். சுமார் 27 லச்சத்துக்கும் அதிகமான மக்கள் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமில் கூடுவார்கள். இதில் பெரும்பாலானோர் கலிலேயராய் இருப்பார்கள். இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்பதை அவர்கள் கேள்விப்பட்டு எருசலேமிலிருந்து இயேசுவின் வருகையை எதிர்நோக்கி நிற்கிறார்கள் அது மட்டுமல்ல திரளான ஜனங்கள் அவரோடு கூட எருசலேமை நோக்கியும் பவனியாக செல்கிறார்கள் (மாற். 11:9).
வசனம் 13- இல் அவர்கள் எப்படி இயேசுவை எதிர் நோக்கினார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது. பேரிட்ச இலைகள் அங்கு அதிகமாகவும் எளிதில் பறிக்க கூடியதாகவும் காணப்படும். மக்கள் ஓலைகளை பிடித்துக்கொண்டு, ஓசன்னா (கர்த்தாவே இரட்சியும்) கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று இடைவிடாமல் தொடர்ந்து ஆர்ப்பரித்தார்கள். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா என்பது இயேசு கிறிஸ்து மேசியா என்பதை குறிக்கிறது.
கூடாரப்பண்டிகை அன்று ஒவ்வொரு நாள் காலையும், மாலையும் தேவாலயத்தின் பாடகர்கள் குழு இதை (ஓசன்னா) பாடலாக பாடுவார்கள் (சங். 118:25,26). பாடர்கள் குழு ஓசன்னா என்று சொல்லும் போது மக்கள் தங்கள் கைகளில் உள்ள ஓலைகளை அசைப்பார்கள். மக்கள் இயேசுவை மேசியாவாகவும், இஸ்ரவேலின் ராஜாவாகவும் ஏற்றுக்கொண்டு ஓலைகளை கையில் பிடித்துக்கொண்டு மிகுந்த ஆரவாரத்தோடு அவரை வரவேற்றார்கள். இயேசு கிறிஸ்து மேசியாவாக, பிதா தனக்கு கொடுத்த இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கிற வேலையை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டு சமாதானத்தின் (அமைதியின் அரசராக) ராஜாவாக கழுதையின் மேலிருந்து வெற்றி பவனியாக எருசலேமுக்குள் செல்கிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
7. அருளுரை குறிப்புகள்
கிறிஸ்துவே அமைதியின் அரசர்
1. உள்ளத்து அமைதி அருளும் அரசர்
2. சமூகத்தில் அமைதி அருளும் அரசர்
Written by
Rebin Austin. T
UBS, Pune.
0 Comments