Ad Code

மன்னிக்கும் கிறிஸ்து • Forgiving Christ • CSI Tirunelveli Diocese 5/3/2023

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
தேதி: 5/3/2023
வண்ணம்: கருநீலம்
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்: 

2. திருவசனம் & தலைப்பு 
     மன்னிக்கும் கிறிஸ்து
மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். (பவர் திருப்புதல்).
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார். (திருவிவிலியம்).

3. ஆசிரியர் & அவையோர் 
மத்தேயு என்னும் யூதர் இதன் ஆசிரியர் என்று ஆதி திருச்சபை அங்கீகரித்துள்ளது. இவருக்கு அல்பேயுவின் குமாரனாகிய லேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு (மாற். 2:14). மத்தேயு என்னும் பெயருக்கு "கடவுளின் தானம்" என்று பொருள். இவர் இயேசு கிறிஸ்துவின் சீடர் மற்றும் பன்னிரெண்டு அப்போஸ்தலர்கலில் ஒருவர் ஆவார். இந்நூல் இயேசுவை மெசியாவாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு எழுதப்பட்டது. 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
மத்தேயு எழுதப்பட்ட காலத்தை நிர்ணயிப்பது எளிதல்ல. மாற்கு நூலை அடப்படையாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டதால், மாற்கு நூலிற்கு பிற்பாடு கி. பி. 58-68 -குள் எழுதப்பட்டிருக்கும் என்று கருதுவது ஏற்புடையது.

5. திருவசன விளக்கவுரை 
இயேசு கப்பர்நகூமிலிருந்து கெர்கெசனேர் நாட்டிற்க்கு சென்று அங்கு இரண்டு பிசாசு பிடித்தவர்களை குணமாக்கிவிட்டு மீண்டும் கப்பர்நகூமிற்கு வருகிறார் (மாற். 2:1-2). கப்பர்நகூமில் இயேசு, வீட்டில் இருக்கும் போது அங்கே ஒரு திமிர்வாதாகாரனை சுமந்து கொண்டு வருகிறார்கள். அங்கே கலிலேயா யூதேயா நாட்டில் உள்ள கிராமத்தில் இருந்தும் மற்றும் எருசலேம் நகரத்தில் இருந்தும் வந்த பரிசயேர்கள், வேதபாரகர் மற்றும் நியாயாயசாஸ்திரிகள் வந்திருந்தார்கள் (லூக். 5:17).  

இயேசு கிறிஸ்து முடக்குவாதமுற்றவரை குணமாக்குவதர்க்கு முன்பாக அவருடைய பாவங்களை மன்னிகிறார். பாவத்திற்க்கும் நோய்க்கும் தொடர்பு உள்ளது என்பதை பழைய ஏற்பாட்டு நூல்கள் தெளிவாக விளக்குகின்றன (சங். 103:3). எனவே இயேசு முதலாவது முடக்குவாதமுற்றவரின் பாவத்தை மன்னிகிறார் (9:2). இதை கேட்டுக்கொண்டிருந்த பரிசயேர்கள், வேதபாரகர் மற்றும் நியாயாயசாஸ்திரிகள் பாவங்களை மன்னிக்கிறதர்க்கு இயேசு யார் என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுகிறது. ஏனென்றால் கடவுள் (யெகோவா) ஒருவரே பாவங்களை மன்னிக்கிறதர்க்கு அதிகாரம் உடையவர் என்பதுதான் யூதர்களுடைய நம்பிக்கை எனவே இயேசு செய்தது கடவுளுக்கு எதிரான செயல் என்று தங்களுக்குள் நினைத்தனர்.

ஆனால், வசனம் 6- இல் இயேசு கூறுகிறார் மனுஷகுமாரனுக்கு மனிதர்களுடைய பாவங்களை மனிக்கிறதர்க்கு அதிகாரம் உண்டு என்பதைக் இயேசு முடக்குவாதமுற்றவரை குணப்படுத்துவதன் மூலம் நிரூபிக்கிறார். பழைய ஏற்பாட்டில் அதிகாரம் என்பது யெகோவாவை சார்ந்தது (சங்: 29:10) ஆனால் புதிய ஏற்பாட்டில் அந்த அதிகாரம் முழுவதும் இயேசு கிறிஸ்துவுக்கு முழுமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பாவத்தை மன்னிகிறதர்க்கு முழு அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். எனவே முடக்குவாதமுற்றவரின் நோயை குணப்படுத்துவதின் மூலம் தனக்கு பாவங்களை மன்னிப்பதற்கான முழு அதிகாரம் உண்டு என்பதை இயேசு நிருப்பிக்கிறார்.

6. இறையியல் & வாழ்வியல்
இஸ்ரயேலில் தோன்றிய எந்தவொரு இறைவாக்கினரும் (தீர்க்கதரிசி) இத்தகைய செயலைச் செய்ததாக வேதத்தில் நாம் பார்க்க முடிவதில்லை .இயேசுவின் காலத்தைச் சேர்ந்த பல யூதர்கள், இயேசுவை மெசியாவாக பார்க்கவில்லை. இவ்வுலகில் மானிட மகனாக தோன்றிய இயேசு கிறிஸ்து தமது இறைத்தன்மையை அதாவது பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தமக்கு இருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தும் விதமாக பாவங்களை மன்னித்தார். மேலும் தாம் இறைவாக்கினரிலும் மேலான ‘இறை மகன்’ என்பதை இயேசு தமது செயல்கள் வழியாக நிரூபித்தார். இயேசு பாவங்களை மன்னித்ததாக கூறியதை, யூத சமயத்தலைவர்கள் தெய்வ நிந்தனையாக கருதினர். 

இங்கு யூத சமயத்தலைவர்கள் மன்னிக்கும் தன்மையில்லாதவர்களாக, இயேசு மன்னிக்கும் போதும், அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லாதவர்களாகவும் இருந்தனர். நாம் எப்படி இருக்கிறோம்? பிறரது குற்றங்களை மன்னிக்கிறோமா? பிறர் குற்றங்களை நாம் மன்னித்தால், நமது குற்றங்களை கடவுள் மன்னிப்பார் என்பதே இயேசுவின் போதனை.இயேசுவோ, மானிட மகனாக தன் அன்பின் மன்னிக்கும் தன்மையை வெளிப்படுத்தினார். நமது பாவங்களை மன்னிக்க அன்பும் அதிகாரம் கொண்டவர் மானிட மகனாக தோன்றிய இறை மகன் இயேசுவே. ஆகவே, இயேசுவை ஏற்று அவரை நாடிச் செல்வோர் பாவங்களில் இருந்து விடுபடுவது உறுதி.

7. அருளுரை குறிப்புகள்
       மன்னிக்கும் கிறிஸ்து
 1. இயேசுவின் மன்னிக்கும் இருதயம் vs யூதர்கள் இருதயம்
 2. இயேசுவின் மன்னிக்கும் அதிகாரம் vs யூதர்களின் சமய அதிகாரம்
 3. இயேசுவின் பரந்த மனப்பான்மை vs யூதர்களின் குறுகிய மனப்பான்மை

Acknowledgement
T. Rebin Austin
Union Bible Seminary 

Post a Comment

0 Comments