Ad Code

தேடிவந்த அனைவரும் சுகம்பெறுதல்: இறைமைந்தரை அறிந்துகொண்ட மக்கள் Miracles of God's Son

1. தலைப்பு
தேடிவந்த அனைவரும் சுகம்பெறுதல்: இறைமைந்தரை அறிந்துகொண்ட மக்கள்

2. திருமறை பகுதி
மத்தேயு 14:34-36 
மாற்கு 6:53-56

3. இடம் & பின்னணி
இயேசுவின் சீஷர்கள் அக்கடலைக் கடந்து, கெனெசரேத்தின் கரைக்கு வந்த போது, திராளன மக்கள் கூடிய போது, இந்த அற்புத சம்பவம் நடைபெற்றது. இது இயேசுவின் ஊழிய காலத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த நடைப்பெற்றிருக்க மிக வாய்ப்புண்டு. 

4. விளக்கவுரை
இயேசுவும் அவரது சீடர்களும், படகை விட்டு இறங்கியபோது மக்கள் இயேசுவைப் பார்த்தனர். அம்மக்கள், அவர் யாரென்று அவர்கள் அறிந்துகொண்டு, ஓடிப்போய் அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் இயேசு இங்கே இருக்கிறார் என்பதை அறிவித்தார்கள். இயேசு போகிற எல்லா இடங்களிலும் மக்கள் நோயாளிகளைப் படுக்கையோடு எடுத்து வந்தனர். அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் நகரங்களுக்கும் பண்ணைகளுக்கும் இயேசு சென்ற போது, அங்குள்ள மக்கள் நோயாளிகளை அவரிடம் எடுத்து வந்தனர். அவர்கள் இயேசுவிடம் அவரது ஆடை நுனியையாவது தொடுவதற்கு அனுமதி கேட்டனர். அவரைத் தொட்டவர்கள் எல்லோரும் குணமடைந்தனர்.

5. கருத்துரை
மத்தேயு 14: 35 சொல்லுகிறது: "அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டனர். அவர்கள் அவர் யார் என்பதை அறிந்திருந்தனர்." இந்த அறிதல் தான் இயேசுவின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க வழிவகுத்தது. இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள் அவர் யார்? எப்படிப்பட்டவர்? அவருடைய குணம் என்ன? என்பவற்றை மக்களுக்கு வெளிப்படுத்தின. அவரது அன்பையும் ஆதரவையும் புரிந்துகொண்ட மக்கள் அவரைத் தேடி சென்றனர். அவரை நம்பி பின்சென்று நல்வாழ்வு பெற்றனர். நாமும் கடவுளைத் தேடி, நம்பி அவரை அறிந்து கொள்வோம்; ஆசீர் பெறுவோம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments