Ad Code

ஜார்ஜ் ஹார்லி மிஷனரி • George Missionary

அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் ஹார்லி என்னும் மருத்துவர் தன் கர்ப்பிணி மனைவியுடன் மிஷனரியாக சைபீரியாவுக்குச் சென்றார்.

ஒதுக்குப் புறமான காட்டுப் பகுதியில் அவர் பணி செய்தார்.

ஐந்து வருடங்களாக பணி செய்தும் ஒரு வரும் ஏற்றுக்கொள்ளவில்லை. வருந்தி அழைத்தாலும் ஆராதனைக்கு ஆப்பிரிக்கர்கள் யாரும் வரவில்லை.

ஒருநாள் திடீரென அவருடைய மகன் மரித்துப்போனான். அவரே சவப்பெட்டியை செய்து அடக்கம் செய்யும் இடத்திற்கு தூக்கி செல்ல வேண்டியதாயிற்று. அவருக்கு உதவியாக வந்த ஒரே ஒரு ஆப்பிரிக்கா காட்டுவாசி தவிர வேறு யாரும் அவருடன் செல்லவில்லை.

சவப் பெட்டியின் மேல் மண்ணைப் போட்டு மூடி கொண்டிருக்கும்போது மிஷ்னெரி வேதனையின் உச்சத்துக்கு போய் மண்ணில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதார்.

அதை பார்த்துக்கொண்டிருந்த காட்டுவாசி அவர் தலையை தூக்கி அவர் முகத்தையே உற்றுப்பார்த்தான். அவன் கிராமத்துக்கு ஓடிப்போய் வெள்ளைக்காரன் நம்மைப்போல அழுகிறான் என்று கூக்குரலிட்டான்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடக்கும் பகுதி ஆப்பிரிக்கர்களால் நிறைந்தது.

ஹார்லி இயேசுவுக்காக பல சாதனைகளைச் செய்தார். தன் மகனை விலையாக கொடுத்ததினால் சுவிசேஷம் சைபீரியாவில் தழைத்தது.

பிதாவும் தன் ஒரேபேரான குமாரனை இவ்வுலகத்துக்கு அனுப்பி அவரது இரத்தத்தினால் பாவமன்னிப்பாகிய மீட்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

நாம் மக்களை விட்டு பிரிந்து இருப்போமானால் சுவிசேஷம் அவர்களுக்குள் செல்லாது.

நாமும் அவர்களைப் போல அவர்களோடு ஒன்றுபட்டோம் ஆனால் நற்செய்தி அறிவிப்பதற்கு சிறந்த வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments