பல குழந்தைகளுடன் ஒரு ஏழை இந்து குடும்பம் பல நாட்களாக பட்டினியால் வாடுவதை ஒரு நாள் அவர் அறிந்தார்.
உடனே அந்த குடும்பத்திற்கு தேவையான அரிசிப் மூட்டையை கையில் ஏந்திக்கொண்டு அந்த குடும்பத்தை நோக்கி விரைந்தார். அந்த குடும்பத்தின் தாய் நன்றியுடன் அரிசி மூட்டையைப் பெற்றுக்கொண்டார்.
பசியால் வாடிய அந்தப் பெண், பையில் இருந்த அரிசியை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி அரிசியுடன் வெளியே சென்றாள்.
அவள் திரும்பி வந்ததும், அன்னை தெரசா அவளிடம் எங்கே போனாய் என்று கேட்டார். என்னைபோன்றே வறுமையிலும், பட்டினியிலும் வாடும் பக்கத்து முஸ்லிம் குடும்பத்திற்கு அரிசியில் ஒரு பங்கைக் கொடுக்கச் சென்றதாக அந்தப் பெண் பதிலளித்தாள்.
தனக்கு கிடைத்த சொற்ப வெகுமதியை பட்டினியால் வாடும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ள வைத்தத ஏழைப் பெண்ணின் அன்பும், கருணையும், அன்னை தெரசா அவர்களை மிகவும் தொட்டது.
ஆம், நமது உலகப் பொருட்களை அதிக தேவை உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
"நாம் பெறுவதைக் கொண்டு வாழ்கிறோம், ஆனால், நாம் கொடுப்பதன் மூலம் பிறர் வாழ்க்கையை உருவாக்குகிறோம்."
எனது பிள்ளைகளே, நம் அன்பு வார்த்தைகளிலும் பேச்சிலும் மட்டும் இருக்கலாகாது. நம் அன்பு உண்மையான அன்பாக இருக்க வேண்டும். நாம் செய்கிற காரியங்களால் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும். ( 1 யோவான் 3:18)
0 Comments