Ad Code

விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் இயற்கை • Environmental Sunday Sermon • 11/6/2023

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு + தூயர் பர்னபா திருநாள்
தேதி: 11/6/2023
வண்ணம்: சிவப்பு / பச்சை
திருமறைப் பாடங்கள்:
எசேக்கியேல் 36. 24 - 36
ரோமர் 8. 18 - 25
யோவான் 20. 19 - 23
சங்கீதம்: 29

2. திருவசனம் & தலைப்பு 
     விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் இயற்கை
சங்கீதம் 104:30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும், நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர். (பவர் மொழிபெயர்ப்பு)
திருப்பாடல்கள் 104.30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். (திருவிலியம்)

3. ஆசிரியர் & அவையோர் 
சங்கீதம் 104 ஐ இயற்றிய கவிஞர் யார் என்று இந்த சங்கீதத்தின் முகவுரையில் இல்லை. செப்துவதிக் (Septuagint) மரபில் இந்த சங்கீதத்தின் ஆசிரியர் தாவீது என்று நம்பப்படுகிறது.

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்த சங்கீதம் யாரால் எழுதப்பட்டது என்பது சரியாக தெரியாததால், எழுதப்பட்ட காலம் மற்றும் சூழ்நிலையை அறிவது கடினம். 

5. திருவசன விளக்கவுரை 
சங்கீதம் 104 படைப்பாளராகிய கடவுளின் மகிமையையும் அவரது சர்வ வல்லமை பொருந்திய செயல்களையும் குறித்து பாடிய பாடல். கடவுள் மனுக்குலத்தை மட்டும் படைக்கவில்லை. சங்கீதம் 104 இல் கடவுளின் படைப்பாகிய மரம், சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள் என எல்லாவற்றையும் குறித்து வருகிறது. இந்த சங்கீதத்தை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தோடு ஒப்பிட்டு படிக்க இயலும். சங்கீதம் 104. 27 முதல் 30 வரை கடவுளை சார்ந்து அவரது படைப்புகள் வாழ்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடவுள் தான் முழு அதிகாரம் படைத்தவர் என்பது தெளிவாகிறது. அனைத்து படைப்புக்கும்...
1. கடவுள் ஆகாரம் கொடுக்கிறார் 104.27,28
2. ஜீவனை எடுக்கிறார் 104.29
3. மீண்டும் ஜீவனைக் கொடுக்கிறார் 104.30

சங்கீதம் 104.30 ஐ நாம் ஆராயும் பொழுது, கடவுள் படைப்பாளர் (சிருஷ்டிகர், Creator) என்றும் புதுப்பிப்பவர் (Renewal) என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. அனைத்து உயிரினங்களும் கடவுளின் ஆவியால் இயங்கிக் கொண்டிருக்கிறது. படைத்த அவர், சிருஷ்டிப்பு தவறும் போது, சீர்திருத்தி, மீண்டும் புதுப்பிக்கிறார். முழு பூமியின் ரூபத்தையுமே அவர் புதிதாக்குகிறார். எல்லாம் வல்ல இறைவன் தான் தான் இயற்கையும் படைத்தவர். அவர் இயற்கைக்கும் கடவுள் என்பதை இந்த சங்கீதம் வலியுறுத்துகிறது.

6. இறையியல் & வாழ்வியல்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நவீன காலத்தில், இயற்கையின் மீது நம் கவனம் எப்படியிருக்கிறது என்பது கேள்விக்குறியே. இயற்கை மனிதனின் செயற்கைத்துவம் என்னும் அடிமைத்தனத்தில் சிக்கித் தவிக்கிறது. மனிதனின் ஒழுங்கற்ற வாழ்வு மற்றும் பேராசை இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருப்பது வேதனையான செயல். விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் இயற்கையை விடுவிப்பது யார்? படைப்பாளர் ஒருவர் மாத்திரமே நிரந்தர விடுதலையைக் கொடுக்க முடியும். அவர் தம் ஆவியால் புதுப்பிக்குகிறார். படைப்பாளர் தம் பிரதான படைப்பாகிய மனுக்குலத்திற்கு கொடுத்த பொறுப்பு மிக முக்கியமானது. மனிதர்களாகிய நாம் தான் கடவுளின் கருவிகள். நாமும் இயற்கையோடு இணைந்து வாழும் இயற்கை என்பதை மறந்து விடக்கூடாது. நம்மைப் போல, எல்லா படைப்புகளும் விடுதலையை வாஞ்சிக்கின்றன. நாமும் அதை உணர்ந்து இயற்கையை காக்க வேண்டும்; பேண வேண்டும்.

7. அருளுரை குறிப்புகள்
      விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் இயற்கை
 1. மனிதனையும் உள்ளடக்கிய இயற்கை
 2. விடுதலை அளிப்பவர் கடவுள்
 3. விடுதலைப் பயணத்தில் மனிதனின் பங்கு

எழுதியவர்
மே.யே.கோல்டன் ரதிஸ்
சபை ஊழியர்,
இராமையன்பட்டி.

Post a Comment

0 Comments