ஞாயிறு: பெந். திரு.நாள். பின். 3-ம் ஞாயிறு (திரித்துவ 2).
தேதி: 18/06/2023
வண்ணம்: பச்சை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
ஆராதனை : பற்றுறுதியாளர்களின் கொண்டாட்டம்
யோவான் 4:23 (பவர் திருப்புதல்) உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
(திருவிவிலியம்) காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.
3. ஆசிரியர் & அவையோர்
இடி முழக்கத்தின் மக்கள் என்று அழைக்கப்பட்ட செபதேயுவின் புதல்வரும் யாக்கோபின் சகோதரரும் அபோஸ்தலருமான யோவான் எழுதிய நற்செய்தி நூல் இதுவாகும். முதல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. குறிப்பாக இச்சமூகம் "யோவானின் சமூகம்" (Johannaine Community) என்று அறியப்படுகிறது.
4 எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கிபி 70-இன் எருசலேமின் அழிவுக்கு பின்பும் பத்மு தீவுக்கு யோவான் நாடுகடத்தப்படுவதர்க்கு முன்பும் இந்த நற்செய்தி நூல் எழுதப்பட்டது. சுமார் கிபி 80- க்கும் கிபி 90- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பொய் போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி இயேசு மாம்சத்தில் வெளிப்படவில்லை என்று துர் உபதேசத்தை பரப்பினர். இதற்கு பதில் கூறும் விதமாகவும் இயேசு மாம்சத்தில் பிறந்தார் என்றும் அவர் கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்றும் மற்றும் மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார் என்று சாட்சி கூறவும் யோவான் இந்த நற்செய்தி நூலை எழுதினார்.
5. திருவசன விளக்கம்
மோசேயின் சட்டப்படி சமாரியர்கள் மற்றும் யூதர்கள் கடவுளை தொழுது கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்தை வைத்திருப்பார்கள் (உபா12:5). ஆகவே தான், சமாரிய ஸ்திரி எந்த இடத்தில் வைத்து கடவுளை தொழுது கொள்ள வேண்டும் என்பதை பற்றி இயேசுவிடம் கேள்வியை கேட்கிறாள் (வச.20). சமாரியர்கள் மற்றும் யூதர்கள் மத்தியில் எந்த இடத்தில் வைத்து கடவுளை தொழுது கொள்ள வேண்டும் என்கிற குழப்பம் காண்ப்பட்டது. யூதர்கள் ஜெருசலேமை கடவுளை தொழுது கொள்ளும் அதிகாரப் பூர்வமான இடமாக கருதினார்கள் (தேவாலயம் கட்டப்பட்டிருந்த இடம்); ஆனால், சமாரியர்கள் ஆபிரகாம் கடவுள் வாகுத்தத்தம் பண்ணின தேசத்திற்க்குள் பிரவேசிக்கும் முன் கட்டின பலிபீடம் அமைந்துள்ள கெர்சிம் மலையை கடவுளை தொழுது கொள்ளும் அதிகாரப் பூர்வமான இடமாக கருதினார்கள். ஆனால், இயேசு ஜெருசலேம் மற்றும் கெர்சிம் மலையில் மாத்திரம் அல்ல, பிதாவை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வரும் என்கிற தெளிவான பதிலை கூறுகிறார் (வச.21). ஏனென்றால், கடவுளுடைய இராஜியத்தின் புதிய தொடக்கம் இயேசு கிறிஸ்து மூலம் இந்த பூமியில் ஆரம்பித்துவிட்டது எனவே, கடவுளை தொழுது கொள்ள குறிப்பிட்ட இடம் தேவை இல்லை (வச.21) ஆனால், ஆவியாயிருக்கிற கடவுளை (வச.24) ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்வதே உண்மையான ஆராதனையின் அடையளம் (வச.23) என்பதை இயேசு இங்கு சுட்டிக் காண்பிக்கிறார்.
7. அருளுரை குறிப்புகள்
ஆராதனை: பற்றுறுதியாளர்களின் கொண்டாட்டம்
1. எங்கும் தொழுவோம்
2. எப்போதும் தொழுவோம்
3. எதிர்நோக்குடன் தொழுவோம்
எழுதியவர்
திரு. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்,
கல்லிடைகுறிச்சி
0 Comments