1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: திருத்துவ திருநாளுக்கு பின்வரும் ஆறாம் ஞாயிறு
தேதி: 16.07.2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
யோசுவா 1.1 - 9
2 கொரிந்தியர் 5. 16 - 6.10
மாற்கு 6. 7 -19
சங்கீதம்: 18 .19 - 30
2. திருவசனம் & தலைப்பு
இறைமக்கள் கிறிஸ்துவின் தூதுவர்கள்
2 கொரிந்தியர் 5:20 (பவர் திருப்புதல்)
ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
2 கொரிந்தியர் 5:20 (திருவிவிலியம்)
எனவே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.
3. ஆசிரியர் & அவையோர்
2 கொரிந்தியர் நிருபம் தூய பவுல் அப்போஸ்தலர் & தீமோத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. ( 2 கொரி:1:1)
இது கொரிந்தியருக்கு எழுதின நான்காவது கடிதம் ஆகும். கொரிந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள தனது சபைகளில் தூய பவுல் அப்போஸ்தலர் தொடர்பில் இருந்ததையும், அவற்றின் வரலாறு, தன்மை மற்றும் பிரச்சனைகளை நன்கு அறிந்திருந்ததையும் இந்தக் கடிதங்கள் பிரதிபலிக்கின்றன.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
மக்கெதோனியாவிலிருந்து, கிபி 55-57 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த கடிதம் எழுதப்பட்டது என கணக்கிடப்படுகிறது. இங்கு தூய பவுல், தேவனோடே ஒப்புரவாகுதலின் முக்கியத்துவத்தை விசுவாசிகளுக்கு கற்பிக்கிறார்.
5. திருவசன விளக்கவுரை
ஸ்தானாதிபதிகள் என்றால் தூதுவர்கள் அல்லது செய்தி கொண்டு செல்லுபவர்கள் (Messengers) என்று அர்த்தம். 2 கொரி: 5:20 -ன் முதற்பகுதில், கிறிஸ்துவுக்காக ஸ்தானாதிபதிகள் என்றழைக்கப்படுகிறவர்களை இந்த உலகத்திற்கு கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என பொருள் கொள்ளலாம் (The representatives of Christ). பிரதிநிதிகளின் பிரதான பணி, ஆண்டவரால் கொடுக்கப்படும் செய்திகளை இறைமக்களிடம் கொண்டு சேர்ப்பது. இங்கு கொரிந்திய கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைப் போல நடந்துகொண்டனர், எனவே பவுலும் அவருடைய உடன் ஊழியரும் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள், எப்படி கிறிஸ்து சிலுவையில் நமக்காக நம்முடைய பாவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது போல (2 கொரி 5:21) பவுல் செயல்படுகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
இன்றைக்கு சமுதாயத்தில் & தனி நபர் வாழ்வில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வு, கருத்துவேறுபாடு போன்றவைகள் நீங்க இன்றே ஒப்புரவாகுவோம்.
ஆதி 37:4 ல் யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை பகைத்தார்கள். இன்னும் அதிகமாக பகைத்தார்கள் (ஆதி 37:5 ). பின்பு அது கொலை வெறியாக மாறியது (ஆதி 37:18).
ஆனாலும் யோசேப்பு அவர்களோடு நல்ல உறவு வைத்திருந்தான். யோசேப்பினுடைய இருதயத்தை பார்க்கும் போது தன் தகப்பன் வீட்டாரைக் குறித்து கசப்போ, வெறுப்போ ஒன்றும் இல்லாதபடிக்கு தன் சகோதர்களோடு ஒப்புரவாகி அவர்களை ஏற்றுக்கொண்டார் என்று பார்க்கிறோம்.
மத்தேயு 5:23-24 ல் “நீ பலி பீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வரும் போது உன் சகோதரனுக்கு உன் பேரில் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், உடனே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து விட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து என்று இறைமகன் ஒப்புரவாகுதலின் முக்கியத்துவத்தை நமக்கு இங்கு கற்றுக்கொடுக்கிறார்.
7. அருளுரை குறிப்புகள்
இறைமக்கள் கிறிஸ்துவின் தூதுவர்கள்
1. ஒன்றுபடுத்தும் தூதுவர்
2 கொரி 5. 18
1 கொரி 5. 16 - 20
2. வழிகாட்டும் தூதுவர்
2கொரி 6.1
யோசுவா 1. 1 - 9
3.முன்மாதியான தூதுவர்
2 கொரி 6. 3 -4 ff
மாற்கு 6. 7 - 11
எழுதியவர்
திரு. D. ஜோயல் ராஜா சிங் MA BD
சபை ஊழியர்
கே.டி.சி நகர் சேகரம்
திருநெல்வேலி.
0 Comments