Ad Code

இளையோரின் ஆன்மீக வாழ்வு • Youth Sunday Sermon • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் 13ஆம் ஞாயிறு
தேதி: 3/9/2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
ஆதியாகமம் 41: 37 - 43
பிலிப்பியர் 3. 1 - 16
மத்தேயு 19. 16 - 22
சங்கீதம்: 111

2. திருவசனம் & தலைப்பு 
    இளையோரின் ஆன்மீக வாழ்வு
 பிரசங்கி 11:9 - ( பவர் திருப்புதல் ) வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட, ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

சபை உரையாளர் 11:9 ( திருவிவிலியம் )
இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். 

3. ஆசிரியர் & அவையோர்
இந்நூல் சாலமோன் மன்னனால் (பிர- 1:1,13) அவரது முதுமை காலத்தில் *சாலமோனின் குடிமக்களுக்காக* எழுதப்பட்டது என்று யூத மக்களால் நம்பப்படுகிறது.

 4.எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
       கிமு 95-ஐ அடுத்த காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்நூல் எபிரேய மொழியில் *கொஹேலேத்* ( ஒரு சபையில் பிரசங்கம் செய்பவர் )என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் *எக்ளீசியாஸ்றெஸ்*( பிரசங்கி ) என்று அழைக்கப்படுகிறது.

5. திருவசன விளக்கவுரை 
பிரசங்கி 11 : 7 -10 வசனங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள இரண்டு பக்கங்களை பற்றி எடுத்துரைக்கிறது. எப்படி ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பிறப்பு என்பது ஒரு நிகழ்வாக இருக்கிறதோ அதேபோல இறப்பு என்பதும் ஒரு முக்கியமான நிகழ்வு. இதை எப்பொழுதும் மனிதர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்பதை பிரசங்கி வலியுறுத்துகிறார்.
 வசனம் 9-இல் இளமைப் பருவம் எவ்வளவு முக்கியமான பருவம் என்பதை பிரசங்கி எடுத்துரைக்கிறார். இளமைப் பருவத்தில் மிகவும் *மகிழ்ச்சியாக* இருக்க வேண்டும் என்பதை பிரசங்கி முக்கியத்துவப்படுத்துகிறார். "உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட" என்கிற இந்த பகுதியை எல்லா வேத வல்லுனர்களும் இதை ஏற்றுக் கொள்வதில்லை ஏனென்றால் இந்தப் பகுதி எண்: 25:39 -க்கு முற்றிலும் நேரெதிராய் இருக்கிறது. ஆனால் வசனம் 9-ன் பின்பகுதி இதை சமன் செய்கிறது. எப்படி என்றால், வாலிப வயதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரசங்கி, அதே நேரத்தில் வாலிப வயதில் நன்மையினிமித்தம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், தீமைனிமித்தம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் அதற்கான நியாயத்தீர்ப்பும் உண்டு என்பதையும் வலியுறுத்துகிறார் (பிரசங்கி 12:14).

6. இறையியல் & வாழ்வியல்
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வாலிபப் பருவம் என்பது மிக முக்கியமானது. ஏனென்றால் இந்தப் பருவத்தில் எடுக்கக்கூடிய தீர்மானங்கள் தான் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதே நேரத்தில் இந்த வாலிபப் பருவத்தை குறித்து ஆண்டவர் நம்மிடத்தில் நியாயம் விசாரிக்கிறவராக இருக்கிறார். நாம் இந்த வாலிப பருவத்தில் நன்மை செய்திருந்தாலும், தீமை செய்திருந்தாலும் அதற்கான நியாயத்தீர்ப்பு நிச்சயம் உண்டு. 

வாலிப வயதில் நம்முடைய காரியங்களை கேட்க ஒருவரும் இல்லை அதனால் நாம் நம்முடைய விருப்பம் போல வாழலாம் என்கிற சிந்தனை மேலோங்கும் ஆனால் வேதம் சொல்லுகிறது நம்மை நியாயம் விசாரிக்கிற கர்த்தர் ஒருவர் இருக்கிறார் அவருக்கு முன்பாக நம்முடைய வாலிப பருவத்தை குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும். அதனால் நம்முடைய வாலிபப் பருவத்தை குறித்து கவனமாக இருப்போம் பரிசுத்தமாக அதைக் காத்துக் கொள்வோம்.

7. அருளுரை குறிப்புகள்
      இளையோரின் ஆன்மீக வாழ்வு
 1. இறைவனைப் பகுத்தறிந்து தேடும் காலம்
 2. இறைவனுக்காக துடிப்பாய் உழைக்கும் காலம்
 3. இறைவனுக்காக சாட்சியாய் வாழும் காலம்

எழுதியவர்
T. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்,
கல்லிடைக் குறிச்சி.

Post a Comment

0 Comments