Ad Code

படைப்பின் மேன்மை • God's Creation • CSI Diocese of Tirunelveli

1) ஞாயிறு குறிப்புகள்:
ஞாயிறு: கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 9 ம் ஞாயிறு
தேதி: 28/01/2024
வண்ணம்: செங்கருநீலம்
திருமறைப்பாடம்.
 பழைய ஏற்பாடு : ஆதியாகமம் 1 : 24−31
புதிய ஏற்பாடு: எபேசியர் 1: 3−14
 நற்செய்தி பகுதி : மத்தேயு 6: 9−13
சங்கீதம் 19

2) திருவசனம் & தலைப்பு
        படைப்பின் மேன்மை
                சங்கீதம் 19:1 திருப்பாடல்கள்
(பவர் திருப்புதல்) வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. 

(திருவிவிலியம்) வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 

3) ஆசியர் & அவையோர்
இந்த சங்கீதம் 19 ஐ எழுதியவர் தாவீது ராஜா. இவர் பாடலாக பாடி பாடகர் குழு தலைவனிடம் ஒப்புவித்து, ஆராதனைகளில் பாடப்பட இயற்றப்பட்ட சங்கீதமாகும்.

4) எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை:
இந்த சங்கீதம் கி.மு 1077 - 1038 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. எபிரேய மொழியில் “தெஹில்லீம்” (Tehillim) என்றுஅழைப்பர். இதன் பொருள் “துதியின் பாடல்கள்”என்பதாகும். கிரேக்க மொழிப்பெயர்ப்பானசெப்தஜ்வெந்தில் இதனை “ப்சால்மொய்” (Psalmoi)என்று அழைப்பர். இதன் பொருள் “இசைக்கருவிகளுடன் பாடப்பட்ட பாடல்” என்பதாகும். இலத்தீன் மொழியில் இதன் தலைப்பு “லிபெர் ப்சால் மோரம்” (Liber Psalmorum) என்பதாகும். இதன்பொருள் சங்கீதங்களின் புத்தகம் என்பதே.
 
5) திருவசன விளக்கவுரை 
இந்த திருவசனத்தில் கடவுளின் வெளிப்பாட்டை காணமுடிகிறது.இந்த திருவசனத்தில் கடவுள் படைத்த படைப்பின் மூலம் தம்மை வெளிப்படுத்துகின்றார் என்று கூறுகிறது. இரண்டு படைப்பின் வெளிப்பாட்டை இதில் காணலாம்.ஒன்று வானங்கள். வானங்கள் என்று சொல்லும்போது ஒன்றுக்கு மேற்ப்பட்ட வானம் இருக்கிறதை வெளிப்படுத்துகிறது.

நாம் காண்கிற வானம் முதல் வானம், இரண்டாம்l வானம் சுடர்கள் இருக்கிற வானம் , மூன்றாம் வானம் கடவுளின் சிம்மாசனம் உள்ள வானம். இவை அனைத்தும் கடவுளின் மகிமை வெளிப்படுத்துகிறது. இரண்டாவது ஆகாய விரிவு கடவுளின் கரத்தின் செயலை, வெளிப்படுத்துகிறது. ஆகையால் கடவுள் படைத்த படைப்பு கடவுளை மகிமைப்படுத்தி, அவருடைய கரத்தின் செயலை அறிவிக்கிறது போல நாமும் கடவுளை மகிமைப்படுத்தி , அவருடைய செயலை அறிவிப்போம்.

6. இறையியல் & வாழ்வியல்
இன்றை உலகில் நாம் யாரையோ புகழ்கிறோம், உயர்த்துக்கிறோம், துதிபாடுகிறோம். ஆனால் நம்மை படைத்த கடவுளை நாம் மகிமைப்படுத்துகிறோமா? கடவுளின் மகத்துவத்தை அறிவிக்கிறோமா? கடவுளின் படைப்பில் விசேஷித்த படைப்பு மனிதன் . மற்ற படைப்பு கடவுளை மகிமைப்படுத்துகிறது. மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்று சிந்தித்து செயல்படுங்கள்.கடவுளின் ஆசீர்வாதம் உங்களோடிப்பதாக , ஆமென்!

7. அருளுரை குறிப்புகள் :
1.படைப்பு எல்லாமே படைப்பின் மேன்மை.
2.படைப்பை ஆசீர்வதிப்பது படைப்பின் மேன்மை.
3.படைத்தவரை வேண்டிக்கொள்வது படைப்பின் மேன்மை.

Written by 
Mr. Mansingh Clinton
Gurukul Lutheran Bible College 

Post a Comment

0 Comments