Ad Code

அமைதிக்காக ஒன்றுபடுதல் • Uniting for Peace • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறி. பிற. திரு. பின். 4-ம் ஞாயிறு (பிரசன்ன 3)
தேதி : 21/01/24
வண்ணம்: வெள்ளை 
திருமறை பாடங்கள்: 
சங்கீதம் : சங்கீதம் 4

2. திருவசனம் & தலைப்பு
 அமைதிக்காக ஒன்றுபடுதல்
     (பவர் திருப்புதல்). தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்: சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம். 
நீதிமொழிகள் 12:20
 சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர். 
நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 12:20 (திருவிவிலியம்).

 3. ஆசிரியர் &அவையோர்
 சாலமோன் என்று பொதுவாக கூறலாம் (1:1). ஆனால் நூலின் இறுதி பகுதி ஆகூர் (30:1)மற்றும் லேமுவேலால் (31:1) எழுதப்பட்டது.
1 இராஜா 4:32-ன் படி சாலொமோன் 3000 நீதிமொழிகளும் 1005 பாடல்களும் எழுதி உள்ளார். ஆனால் 800 நீதிமொழிகள் மட்டுமே இந்நூலில் காணப்படுகிறது.

இஸ்ரவேல் மக்கள் ஆவிக்குரிய நிலையிலும், அரசியல் நிலையிலும், செல்வ நிலையிலும் சிறந்த நிலையை அடைந்திருந்த காலமே சாலமோனின் ஆட்சி காலம். இந்தப் புத்தகம் பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், அயலகத்தார், அதிகாரிகள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிக்கிறது. வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ள தேவையான ஆன்மீக பார்வையை மக்களுக்கு கொடுக்கிறது.

4.எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
         சாலொமோனின் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் எழுதப்பட்டது. பெரும்பாலும் 931 கி. மு. என்று எண்ணப்படுகிறது. 25-29 வரையான அதிகாரங்கள் (700 கி. மு.) எசேக்கியாவால் சேகரித்து இணைக்கப்பட்டவை.

5.திருவசன விளக்கவுரை
          இருதயத்திலே சிந்திக்கிற மற்றும் திட்டமிடுகிற காரியத்தின் பின் விளைவுகளை குறித்து இந்த வேத பகுதி எடுத்துரைக்கிறது. இந்த வசனம் நேரெதிரா இருக்கிற இரண்டு காரியங்களை ( தீங்கை பிணைக்கிறவர்கள் vs சமாதானம் பண்ணுகிறவர்கள் and கபடம் vs சந்தோசம்) மையப்படுத்துகிறது. சதி திட்டத்தை வகுப்பவர் உள்ளத்தில் சந்தோசம் இருப்பதில்லை மற்றும் தங்கள் இருதயத்தில் உள்ள கபடத்தை தங்களின் சதி திட்டத்தின் வெற்றிக்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால், சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரர்கள் ஒன்று கூடி இருதயத்தில் கபடம் உள்ளவர்களின் சதி திட்டத்தை தடுத்து சமாதானத்தை ஏற்ப்படுத்துகிறார்கள். ஆலோசனைக்காரர்கள் சமாதானத்திற்காக ஒன்று கூடும் போது அங்கு சந்தோசம் ஏற்படுகிறது.

6. இறையியல் & வாழ்வியல்
       நீதிமொழிகள் புஸ்தகம் ஆலோசனைக்காரர்களை ஒரு குழுவாக குறிப்பிடுகிறது (11:14; 15:22; 24:6). ஆலோசனைகாரர்கள் அதிகமாயிருக்கும் இடத்தில் சதி திட்டக்காரர்கள் சமாதானத்தை கெடுத்து போட முடியாது. அநேக நல்ல ஆலோசனைகள், ஆலோசனைகாரர்கள் ஒன்றுபடும் போது திருச்சபை, குடும்பம் மற்றும் சமுதாயத்தில் அமைதி ஏற்படும்.

7. அருளுரை குறிப்புகள்
1. உள்ளத்தில் அமைதி
2. இல்லத்தில் அமைதி
3. சமூகத்தில் அமைதி

எழுதியவர்
திரு. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்
கல்லிடைக்குறிச்சி

Post a Comment

0 Comments