தேதி: 11.2.2024
கிறிஸ்து உயிர்த்தெழுந்த திரு நாளுக்கு முன்வரும் 7 ம் ஞாயிறு.
வண்ணம் : செங்கரு நீலம்
திருமறை பாடங்கள்:
ப.ஏ : ஆதி 26:22 - 32
பு.ஏ : எபேசியர் 2:11 - 22
சங்கீதம் 85
2. திருவசனம் & தலைப்பு:
"உறவுகளை சீர்ப்படுத்தும் காலம்"
(பவர் திருப்புதல்) ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16:7
(திருவிவிலியம்) ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார். பழமொழி ஆகமம் 16:7
(மோனகன் திருப்புதல் {NRSV} - 2017) ஒருவன் வழிகளில் கர்த்தர் பிரியங்கொண்டால், அவனுடைய சத்துருக்களையும் மித்திரராக்குவார். நீதிமொழிகள் 16:7
3. ஆசிரியர் & அவையோர்:
சாலமோன் மன்னர் நீதிமொழிகள் புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். இவர் தாவீது ராஜாவின் மகனும், இஸ்ரவேலின் மூன்றாவது மன்னரும் ஆவார். இஸ்ரவேல் மக்களை ஆள சிறந்த சிந்தனைத் திறனும், அறிவும், ஞானமும், கல்வியும் தேவை என்று சாலமோன் மன்னர் அறிந்து கடவுளிடம் இருந்து இவை யாவற்றையும் பெற்று தனது நாட்டு மக்களின் அரசியல் மற்றும் அவர்களின் வாழ்கை போன்ற எல்லா காரியங்களிலும் ஞானமாக ஆலோசனை கொடுக்க இந்த நீதிமொழிகளை பயன்படுத்தினார்.
இஸ்ரவேல் மக்கள் மாத்திரம் அல்ல, இந்த புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் அவையோர் ஆகும் அளவிற்கு சாலமோன் மன்னர் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார் என்பது இப்புத்தகத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
4. எழுதப்பட்ட காலம்& சூழ்நிலை:
சாலமோனின் ஆட்சி துவக்கத்தில் நீதிமொழிகள் எழுதப்பட்டது. தோராயமாக சொல்ல போனால், கி.மு.1015 முதல் கி.மூ.975 க்குள் இருக்கலாம்.
5. திருவசன விளக்கவுரை:
இந்த திருவசன தியானத்தின் தலைப்பு "உறவுகளை சீர்ப்படுத்தும் காலம்" என்று நமது திருமண்டலத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. உறவுகளை சீர்ப் படுத்தும் காரியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அந்த அடிப்படையில் வேதாகமத்தில் எப்படியெல்லாம் சீரமைக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கும் போது, திருவசனம் நீதி 16:7 ன் படி, நம்முடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமென்று சொன்னால், நம்முடைய எதிராளிகள் கூட நம்மோடு சமாதானம் ஆகும்படி ஆண்டவர் உதவி செய்வார் என்று அறிய முடிகிறது.
வேதத்தில் கர்த்தர் பிரியபடுங்காரியங்களை செய்து தங்களின் உறவுகளை சீர்ப்படுத்தின நபர்களை நாம் தியானிப்போம்.
i) ஈசாக்கு & அபிமெலேக்கு:
அபிமெலேக்கு ஒரு பெலிஸ்திய அரசன் ஆவார். அபிமெலேக்கு நாட்களில் தேசம் மிகப் பெரிய பஞ்சத்தைத் தழுவ நேர்ந்தது, அங்கே பெலிஸ்திய நாட்டின் ஒரு பகுதியான கேரார் பகுதியிலே ஈசாக்கு மற்றும் அவனது மனைவி ரெபெக்காள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்ததினால் அவன் தனது வயல் விளைச்சலில் நூறு மடங்கு பலன் பெற்றான் (ஆதி 26: 12) . இதனால் பொறாமை கொண்ட அபிமெலேக்கு "எங்களை விட்டு போய்விடு " (ஆதி 26:16 ) என்று விரட்டுகிறதை நாம் அறிந்ததே. இதே அபிமெலேக்கு ஆதி 26:26-ல் ஈசாக்கோடே சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள வருகிறான். எப்படி?.....
"கர்த்தருக்குப் பிரியமான வழியாக ஈசாக்கின் வழிகள் இருந்ததுதான், அபிமெலேக்கு திரும்பி வந்து நல்மனம் பொறுந்த காரணம்".
ஈசாக்கு இடம் பெயர்ந்து போகிறான். கேராரின் பள்ளத்தக்கில் கூடாரம் போட்டு, அங்கே அவன் தகப்பன் மூலம் தோண்டப்பட்ட ஒரு துரவை தூர்வாரி பயன்படுத்த விழைகிறான். ஆனால், கேராரின் மேய்ப்பர்கள் வாக்குவாதம் செய்து அத்துரவைப் பறித்தனர்.
இரண்டாவது, ஒரு துரவை வெட்டினார்கள். அதையும் வாக்குவாதம் பண்ணிப் பறித்தனர்.
மூன்றாம் துரவோ, ஈசாக்குக்குடையதாக தேவன் உதவி செய்தார்.
மேய்ப்பர்களிடையே வாக்குவாதம் எழும்பியபோதும், ஈசாக்கு அவர்களோடு வாக்குவாதம் பண்ணாமல் விட்டுக் கொடுத்து விடுகிறான். "விட்டுக் கொடுக்கிறவர்கள் கெட்டுப் போகிறதில்லை, கெட்டுப் போகிறவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதே இல்லை" . ஆம், எனக் கன்பானவர்களே! ஈசாக்கு விட்டுக் கொடுத்தது கடவுளின் பார்வையில் சரி. "விவாதம் எழும்பும் முன் அதை விட்டு விடுதல் வேண்டும் ".
இப்படி ஈசாக்கின் வழி கடவுளை பிரியமடைய செய்ததால், அவன் எதிராளி அபிமெலேக்கு, ஈசாக்கோடே நல்மனம் பொறுந்த ஆண்டவர் அனுக்ரகம் செய்தார்.
ii) யோசேப்பு & அவன் சகோதரர்கள் :
தனது முப்பதாம் வயதில் அரச மேன்மையைப் பெற்றான் யோசேப்பு.
அவனது வாழ்வு, செயல்கள் எல்லாம் தேவன் விரும்பும் வண்ணமாய் இருந்தது. ஆகவே, அவனுடைய சத்துருக்கள் அவனோடு நல்மனம் பொருந்தினார்கள். அப்படி கர்த்தருக்குப் பிரியமாய் அவன் வழிகள் எப்படி இருந்தது ?
#ஆதி 39-ல் "நான் தேவனுக்கு விரோதமாய் பாவஞ்செய்வது எப்படி? என்று பரிசுத்தத்தின் மேல் ஒரு வாஞ்சையிருந்தது, தேவனுக்கு பிரியமாக இருந்தது.
#ஆதி 40-ல் சுயம்பாகி மற்றும் பானப்பாத்திரக் காரனை நலம் விசாரிக்கிறான். தானும் அதே சிறைச்சாலையில் இருந்தாலும் தன்னோடு இருந்தவர்களின் நிலைமையை விசாரித்து தீர்வு சொல்லும் நல் இதயம் அவனுக்கு இருந்தது.
#ஆதி. 45-ல் தனது சகோதரர்கள் அவனை துன்பபடுத்தியிருந்தும், அவர்களை மன்னித்து, ஏற்றுக் கொண்ட உயர்ந்த குணம் அவனுக்கு இருந்தது. அது மாத்திரமல்ல அவர்களின் குடும்பங்களையும் பராமரிக்கிறதைப் பார்க்கிறோம்.
கர்த்தருக்குப் பிரியமான இம்மூன்று குணங்களையும் யோசேப்பு தன்னகத்தே வைத்திருந்ததால், அவன் சத்துருக்கள் (ஒருவனுக்கு அவன் சத்துருக்கள் வீட்டாரே) நல்மனம் பொருந்த ஆண்டவர் உதவி செய்கிறார்.
6. இறையியல் & வாழ்வியல்:
கடவுளுக்கு பிரியமான வாழ்வு நாம் வாழுவோமென்றால்,
நாம் தியானித்தக் காரியங்களின் அடிப்படையில் நமக்கு பகைவர் என்பார் இருக்கவே மாட்டார்கள். நமது உறவுகளும் சீர்ப்பட்டிருக்கும் என்பதே சிறந்த இரையியலும்! வாழ்வியலும்!!.
7. அருளுரைக் குறிப்புகள் :
i) விட்டுக் கொடுத்தல் உறவை சீர்ப்படுத்தும்
ii) தேவனுக்கு விரோதமாய் பாவஞ்செய்யாமல் இருப்பது உறவை சீர்ப்படுத்தும்.
iii) பிறரை விசாரிக்கும் மற்றும் தவறிழைத்தோரை, மன்னித்து ஏற்றுக்கொள்ளுதலும், உறவை சீர்ப்படுத்தும்.
எழுதியவர் :
இ. கோயில் பிள்ளை M.A.,
இறையியல் முதலாமாண்டு மாணவர்,
கன்கார்டியா இறையியல் கல்லூரி, நாகர்கோவில்.
*1. Sunday Notes:*
7th Sunday,before Christ's Resurrection.
(Date: 11.2.2024)
Color : Green
Tribute Lessons:
OT: Genesis 26:22-32
Epistle: Ephesians 2:11-22
Psalm 85
*2. Verse & Title:*
"Lent- A time of Reconciliation "
(Power version) If a man's ways please the Lord, he will make his enemies to be at peace with him. Proverbs 16:7
( Monaghan Translation {NRSV} - 2017) If the Lord delights in a man's ways, he will make his enemies his friends. Proverbs 16:7
(The Bible) If one's actions are pleasing to God, He will make his enemies his friends. Proverbs 16:7
*3. Author & Audience:*
King Solomon was the author of the book of Proverbs. He was the son of King David and the third king of Israel. King Solomon knew that good thinking, knowledge, wisdom and education are needed to rule the people of Israel and he received all these from God and used these proverbs to advise his people wisely in all matters such as politics and their lives.
A special feature of this book is that King Solomon has written this book to the extent that not only the people of Israel, but every person who reads this book is one of them.
*4. Written Period & Circumstance:*
"Proverbs" was written early in Solomon's reign. Roughly speaking, it may be between 1015 BC and 975 BC.
*5. Verse's Commentary:*
The title of this memory verse's meditation is given by a scriptures as "Time to build & reconcile our relationships". Relationship-building is a very important thing.
When we look at how everything is aligned in the Bible, according to Proverbs 16:7, if we say that "our ways will favours to the Lord, we can know that the Lord will help even our opponents to make peace with us".
Let us meditate on the people in the scriptures who did God's favors and mended their relationships.
i)Isaac & Abimelech:
Abimelech was a Philistine king. During the days of Abimelech, the land had to endure a great famine, and there Isaac and his wife Rebekah were living in Gerar, a part of the Philistine country. God blessed Isaac and he reaped a hundredfold in the produce of his field (Genesis 26:12). We know that Abimelech, who was jealous, said to him, "Go away from us" (Genesis 26:16). This same Abimelech comes to make a peace treaty with Isaac in Genesis 26:26. How?...
"Isaac's ways were pleasing to the Lord, and Abimelech's return was good."
Isaac is moving. Camped in the ditch of Gerar, he tries to use a hole dug by his father there. But the herdsmen of Gerar quarreled and took away the aura.
Second, they cut a hole. They also argued and snatched it away.
God helped the third son, Isaac.
When arguments arise between the shepherds, Isaac lets them go without arguing with them. "Givers never get spoiled and spoiled never give up" . Yes, I am proud of you! It was right in God's eyes for Isaac to give up. "Dispute must be left before it arises".
Because Isaac's way pleased God, the Lord, who was kind to Isaac, showed favor to his adversary, Abimelech.
ii) Joseph & his brothers :
At the age of thirty, Joseph became a minister of Egypt.
His life and actions were all God's will. Therefore, his enemies were well-matched with him. How were his ways pleasing to the Lord?
In Genesis 39, "How can I sin against God? There was a request for holiness, and it was pleasing to God.
In Genesis.40 he inquires about the well-being of cook and cupbearer. Even though he was in the same prison, he had a good heart to investigate and solve the situation of those who were with him.
In Genesis.45 he had the high quality of forgiving and accepting his brothers even though they had wronged him. Not only that, we also see them taking care of their families.
Because Joseph had these three qualities that are pleasing to the Lord, the Lord helps his enemies to be kind (for one' enemy is our household members only).
*6. Theology & Biology* :
If we live a life pleasing to God,
Based on what we have meditated on, we will never have an enemy. The best hope is that our relationships will be mended! Life too!!.
*7. Sermon' sNotes :
i) Giving up will mend the relationship
ii)Do not sin against God will mend the relationship.
iii) Interrogating others and accepting and forgiving those who have done wrong will mend the relationship.
Written by :
E.Koilpillai.M.A.,
1st year B.D.
Concordia Theological seminary,
Nagercoil...
*Written by*:
0 Comments