Ad Code

விடுதலை பணியில் பெண்கள் • Women's Sunday • CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: உயி. . திரு .நாள். முன். 9-ம் ஞாயிறு 
தேதி: 04/2/2024
வண்ணம்: செங்கரு நீலம் 💜
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:

2. திருவசனம் & தலைப்பு
விடுதலை பணியில் பெண்கள் 
         நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். 
யோவான் 4:39   ( பவர் திருப்புதல்)

        "நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்" என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். 
யோவான் நற்செய்தி 4:39 ( திருவிவிலியம் )

3. ஆசிரியர் & அவையோர் 
இடி முழக்கத்தின் மக்கள் என்று அழைக்கப்பட்ட செபதேயுவின் புதல்வரும் யாக்கோபின் சகோதரரும் அபோஸ்தலருமான யோவான் எழுதிய நற்செய்தி நூல் இதுவாகும். முதல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. குறிப்பாக இச்சமூகம் (Johannaine Community) என்று அறியப்படுகிறது. 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
கிபி 70-இன் எருசலேமின் அழிவுக்கு பின்பும் பத்மு தீவுக்கு யோவான் நாடுகடத்தப்படுவதர்க்கு முன்பும் இந்த நற்செய்தி நூல் எழுதப்பட்டது. சுமார் கிபி 80- க்கும் கிபி 90- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

பொய் போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி இயேசு மாம்சத்தில் வெளிப்படவில்லை என்று துர் உபதேசத்தை பரப்பினர். இதற்கு பதில் கூறும் விதமாகவும் இயேசு மாம்சத்தில் பிறந்தார் என்றும் அவர் கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்றும் மற்றும் மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார் என்று சாட்சி கூறவும் யோவான் இந்த நற்செய்தி நூலை எழுதினார்.

5. திருவசன விளக்கவுரை
         யோவான் 4 -ம் அதிகாரத்தின் துவக்க பகுதி இயேசு கிறிஸ்துவின் கலிலேய பயணத்தை குறிக்கிறது. இயேசு அதிக ஜனங்களுக்கு திருமுழுக்கு அதிகமானோர் அவரை பின்பற்றுதால், பரிசேயர்கள் மூலம் வரும் வீணான பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு இயேசு யூதேயாவை விட்டு கலிலேயாவை நோக்கி பயணம் செய்கிறார். இயேசு சமாரியாவின் வழியாக கலிலேயாவிற்கு பயணம் செய்கிறார். யோர்தான் நதியை கடந்தும் (near Jericho) கலிலேயாவிற்கு செல்லலாம் மற்றும் சமாரியா வழியாகவும் கலிலேயாவிற்கு செல்லலாம். யோர்தான் நதி வழியாக செல்வதை காட்டிலும் சமாரியாவின் வழியாக செல்வது தான் குறைந்த தூரம் ஆனால், யூதர்கள் சமாரியர்களை வெறுத்தத்தினால் அந்த வழியை பயன்படுத்துவதில்லை. ஆனால், கடவுளின் சித்தப்படி இயேசு சமாரியா வழியாக செல்கிறார் (v.4).

அரசன் உம்ரி காலத்தில் வடக்கு ராஜ்யத்தின் (இஸ்ரவேல் ) தலை நகர் சமாரியா என்று அறிவிக்கப்பட்டது (1 இராஜா 16:24). கி. மு. 722-721 அசீரியா ராஜா சமாரியாவை வெற்றி பெற்று இஸ்ரவேலரை நாடு கடத்தினார். நாடு கடத்தப்பட்ட இஸ்ரவேலர் அங்குள்ள பிற மக்களோடு திருமணம் செய்து அவர்களுடைய மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்கள் (2 இராஜா 17-18). இதனால் யூதர்கள் சமாரியர்களை வெறுத்தனர்.

  ஆனால், இயேசு கிறிஸ்து யூதர்கள் வெறுத்த சமாரியா நாட்டின் வழியே பயணம் செய்கிறார் (V.4). காரணம் ஆண்டவருடைய சித்தப்படி சமாரியா நாட்டு ஸ்திரியை ஊழியத்தில் பயன்படுத்துவதற்க்காக. இயேசு கிறிஸ்து சமாரிய ஸ்திரியின் உண்மையான நிலையை (V.16-18) கூறியதின் மூலம் அந்த ஸ்திரி இயேசுவை தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கிறாள். இயேசு கிறிஸ்து அவர்களுடைய தொழுது கொள்ளும் முறைமையை குறித்து பேசும்பொழுது இயேசுவை மேசியாவாக காண்கிறாள் (v.25). இந்த, ஸ்திரியின் மூலம் இயேசு மேசியா என்று சீகேர் ஊர் மக்கள் இயேசுவை பார்க்க வந்து விசுவாசிக்கிறார்கள். யூதர்கள் பெண்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை ஆனால் இயேசு சமாரிய ஸ்திரியை தன்னுடைய விடுதலை பணியில் பயன்படுத்துகிறார். இதன் மூலம் சமுதாயத்தில் உள்ள பெண் அடிமைத்தனத்தை உடைத்து சீர்திருத்தத்தை கொண்டுவருகிறார்.

6.இறையியில் & வாழ்வியல்
ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் தலைமை பொறுப்பில் வருவது மிகவும் கடினம். இந்த சமுதாயம் பெண்களை பயன்படுத்த விரும்புவதில்லை அதை போல தான் திருச்சபையின் முக்கியமான தலைமை பொறுப்புகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், வேதாகமம் பெண்கள் மூலம் சமுதாயத்தில் உருவாகும் சீர்திருத்தத்தை (விடுதலையை ) வலியுறுத்துகிறது. சமுதாயத்திலும், திருச்சபையுயிலும் ஆண்களுக்கு ஈடாக பெண்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

7. அருளுரை குறிப்புகள்

Post a Comment

0 Comments