Ad Code

ராஜா • King • Jesus Christ • SMC

SMC Lenten Meditation 2024
தியானம்: 36 / 40 - ராஜா
எழுதியவர்: திரு. அலெக்ஸ் கிறிஸ்டோபர்
தலைப்பு : யூதர்களின் அரசர் / இஸ்ரவேலின் அரசர்

தலைப்பின் அர்த்தம் : 
மக்களை ஆளுகை செய்பவர். ராஜா என்பது தூய தமிழில் அரசர் என்பது பொருள்.

வசன இருப்பிடம் :
> மத்தேயு 2:2 - யூதருக்கு ராஜா
> மத்தேயு 2:6 - இஸ்ரவேலின் பிரபு.
> யோவான் 1:49 - இஸ்ரவேலின் ராஜா.

விளக்கவுரை :
எகிப்தில் அடிமைப்பட்டு இருந்த இஸ்ரவேலரை தாம் வாக்குரைத்த கானான் தேசம் வரை கர்த்தரே அவர்களுக்கு ராஜாவாக இருந்து வழி நடத்தினார். ஆனால், அவர்கள் அந்நிய ஜாதி மக்களை போல தங்களுக்கும் ராஜா வேண்டும் என்று கர்த்தரை தள்ளிவிட்டு சவுலை முதல் ராஜாவாக ஏற்படுத்தினார்கள். அவர்கள் கர்த்தரை ராஜாவாக கொண்டு இருந்த போது வனாந்திரத்தில் அவர்களை எவ்வாறு நடத்தினார் என்பதை நாம் அறிவோம்.
மனிதர்களை அபிஷேகித்து ராஜாவாக கொண்டு இருந்தபோது சில வேளைகளில் அவர்கள் தேவனுக்கு பிரியமில்லாதை நாடியதால் 
அவர்களும் மக்களும் பட்ட பாடுகளை நாம் அறிவோம். 

இயேசு கிறிஸ்து "மேசியாவாக" இந்த உலகத்திற்கு வந்தார். அவர் பிறக்கும் போது ராஜாவாக பிறந்தார். சிலுவையில் மரிக்கும் போது ராஜாவாக மரித்தார்.
பின்னர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலும் ராஜாதி ராஜாவாக வருவார்.

1. பிறப்பு :
(மத் 2:2) - சாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாக பிறந்து இருப்பவர் எங்கே ? ( தானியேல் 9:25) பழைய ஏற்பாட்டில்
(சகரி 9:9, ஏசா 9 ,எண் 24:19,மீகா 5:2) உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களின்படியும்,
வரப்போகிற ராஜா தம்முடைய ஜனங்களுக்கு ரட்சகரா இருப்பார் என்று தேடி இயேசுவை கண்டு கொண்டார்கள்.
மெய்யாகவே அவர் ஜனங்களின் பாவங்களில் இருந்து விடுதலையாக்கினார்.

 2. சிலுவையில் ராஜா :
ஜனங்கள் அவரை ராஜாவாக ஏற்றுக்கொண்டு கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டுவந்தார்கள்.இது தீர்க்கதரிசனத்தின் படி உன் ராஜா கழுதையின் மேல் வருகிறார் என்ற படி நடந்தது. பிரதான ஆசாரியரும்,வேதபாரகரும்  
அவரை பிடித்து பிலாத்துவிடத்தில் ஒப்புக்கொடுத்த போது, பிலாத்து இயேசுவை விசாரித்து அவரிடம் ஒரு குற்றமும் காணப்படவில்லை என நினைத்த போதும் யூதர்களின் நெருக்கத்தின்படி சிலுவையில் அறைய ஒப்புவித்தான். அக்காலத்திலே சிலுவையில் அடிக்கப்படும் போது தண்டனை பெற்றவர் செய்த குற்றச்சாற்றை சிலுவையின் மேல் எழுதுவார்கள். இயேசுவின் தலைக்கு மேல் ( யோ19:19 ) மூன்று மொழிகளில் (INRI -லத்தீன், ΙΝΒΙ - கிரேக்கம் , ஹீப்ரு) "நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா" என எழுதப்பட்டு இருந்தது (லூக் 23:42). சிலுவையில் இயேசுவுடன் தொங்க விடப்பட்ட கள்ளன் ஒருவன் இயேசு கிறிஸ்துவை ராஜா என உணர்ந்து 
"உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்து கொள்ளும் என்று கேட்டுக்கொண்டான். 

முடிவுரை :
கிறிஸ்து இன்றும் என்றும் ராஜாவாகவே இருக்கிறார்,முழுமையாக நம்மை நாம் அவருக்கு அர்ப்பணிக்கும் போது அவர் நம்மை ஆளுகை செய்வார். அவர் நம்முடைய செயல்களில் மாற்றத்தையும் வெற்றியையும் தருவார். கிறிஸ்து உலகத்தில் மீண்டும் வந்து அவர் ராஜாதி ராஜாவாக அரசாளுவார். மத் 25:34,41 கூறப்பட்டுள்ள படி அவர் நியாயதீர்ப்பார்.
> (1 தீமோ 6:15,16) அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார்; அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

Post a Comment

0 Comments